முதலில் பேட்டிங் செய்கிறது இந்திய அணி!

முதலில் பேட்டிங் செய்கிறது இந்திய அணி.

இந்தியா மற்றும் மேற்கிந்தியத் தீவுகள் அணிகள் மோதும் 3 போட்டிகள் கொண்ட டி20 தொடர் நடைபெற்று வருகிறது. இதில் ஹைதராபாத்தில் உள்ள ராஜீவ் காந்தி மைதானத்தில் நடைபெற்ற முதல் டி20 போட்டியில் இந்திய அணி 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

இந்நிலையில் இன்று திருவனந்தபுரத்தில் உள்ள மைதானத்தில் 2வது டி20 போட்டி இரு அணிகளுக்கும் இடையே நடைபெற இருக்கிறது.

இதில் டாஸ் வென்ற மேற்கிந்திய தீவுகள் அணி முதலில் பந்து வீச்சை தேர்வு செய்துள்ளது.

இன்றைய போட்டியில் மேற்கிந்திய தீவுகள் அணி ஒரே ஒரு மாற்றத்திற்காக களமிறங்குகிறது. மூத்த வீரர் ராம்டின் வெளியேற்றப்பட்டு அவருக்கு பதிலாக இளம் வீரர் நிக்கோலஸ் பூரன் அணியில் எடுத்து வரப்பட்டு உள்ளார்.

சென்ற போட்டிகளில் வெற்றி அடைந்ததால், அதே நம்பிக்கையுடன் இன்றைய போட்டிக்கான அணியில் எந்தவித மாற்றமும் செய்யாமல் இந்திய அணி களமிறங்குகிறது.

இந்திய அணி வீரர்கள் பட்டியல்:

ரோஹித் சர்மா, லோகேஷ் ராகுல், விராட் கோஹ்லி (கேப்டன்), ஸ்ரேயாஸ் ஐயர், ரிஷாப் பந்த் (கீப்பர்), சிவம் துபே, வாஷிங்டன் சுந்தர், ரவீந்திர ஜடேஜா, புவனேஷ்வர் குமார், தீபக் சாஹர், யுஸ்வேந்திர சாஹல்

மேற்கிந்திய தீவுகள் அணி வீரர்கள் பட்டியல்:

லென்ட்ல் சிம்மன்ஸ், எவின் லூயிஸ், பிராண்டன் கிங், நிக்கோலஸ் பூரன் (கீப்பர்), ஷிம்ரான் ஹெட்மியர், கீரோன் பொல்லார்ட் (கேப்டன்), ஜேசன் ஹோல்டர், கேரி பியர், ஹேடன் வால்ஷ், ஷெல்டன் கோட்ரெல், கெஸ்ரிக் வில்லியம்ஸ்

Prabhu Soundar:

This website uses cookies.