எதிர்வரும் உலகக் கோப்பை தொடரில் பலம் வாய்ந்த 3 அணிகள் குறித்து இங்கு காண்போம்.
டி.20 போட்டிகளுக்கான சாம்பியனை தீர்மானிக்கும் டி.20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் அடுத்த மாதம் துவங்க உள்ளது. ஆஸ்திரேலியாவில் நடைபெற இருக்கும் இந்த தொடரின் முதல் போட்டி அக்டோபர் 16ம் தேதி நடைபெற உள்ளது.
ஒவ்வொரு அணியின் கணவுக்கோப்பையாக இந்த உலகக் கோப்பை தொடர் இருப்பதால் தொடரின் விறுவிறுப்புக்கு பஞ்சமே இருக்காது என எதிர்பார்க்கப்படுகிறது.இதனால் இந்த தொடர் குறித்த சுவாரஸ்யமான பல தகவல்கள் வெளியாகி வருகிறது.
அந்த வகையில் எதிர்வரும் உலகக்கோப்பை தொடரில் பலமாய்ந்த அணியாக கருதப்படும் மூன்று அணிகள் குறித்து இங்கு காண்போம்.
ஆஸ்திரேலியா;
டி20 தொடரில் அசைக்க முடியாத அணியாக வலம் வரும் ஆஸ்திரேலியா அணி இந்த வரிசையில் முதலிடத்தில் உள்ளது. கடந்த 2021 உலகக்கோப்பை தொடரின் வெற்றிப் பிறகு இதுவரை ஒரு முறை கூட டி20 தொடரில் தோல்வியை தலுவாமல் விளையாடி வரும் ஆஸ்திரேலியா அணி எதிர்வரும் உலக கோப்பை தொடரில் பலமாய்ந்த அணிகளில் ஒன்றாக கருதப்படுகிறது.
குறிப்பாக இந்த உலகக் கோப்பை தொடர் ஆஸ்திரேலியா நாட்டில் நடைபெறுவதால் ஆஸ்திரேலியா அணி கோப்பையை வெல்வதற்கு அதிகப்படியான வாய்ப்புகள் உள்ளதாகவும் எதிர்பார்க்கப்படுகிறது.