சர்வதேச ஒருநாள் தொடரில் இங்கிலாந்து அணியின் அதிரடி ஆல்ரவுண்டர் பென் ஸ்டோக்ஸை அதிகமுறை அவுட் செய்த மூன்று வீரர்கள் பற்றி இங்கு காண்போம்.
உலகின் தலைசிறந்த ஆல்ரவுண்டர் களில் ஒருவரான இங்கிலாந்து அணியில் பென் ஸ்டோக்ஸ் மிக சிறந்த முறையில் செயல்பட்டு பல முறை இங்கிலாந்து அணிக்கு வெற்றியை பெற்றுக் கொடுத்துள்ளார்.மேலும் உலக அளவில் நடைபெறும் அனைத்து விதமான தொடர்களிலும் பங்கேற்று விளையாடும் பென் ஸ்டோக்ஸ் தனது அணியின் முக்கிய வீரர் ஆகவே எப்பொழுதும் படம் வருவார் அந்த அளவு திறமை படைத்த பென் ஸ்டோக்ஸ் 2019ஆம் ஆண்டு நடைபெற்ற உலகக் கோப்பை போட்டியில் இங்கிலாந்து அணியின் வெற்றிக்கு முக்கிய ஒரு வீரராக திகழ்ந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் இப்பேர்பட்ட திறமையுள்ள இந்த வீரரை ஒருநாள் தொடரில் அதிகமுறை அவுட் செய்து அசத்திய 3 வீரர்கள் பற்றி காண்போம்.
ஜேம்ஸ் பால்க்னர்
2015ஆம் ஆண்டு நடைபெற்ற உலகக் கோப்பை தொடரை ஆஸ்திரேலியா அணியின் முக்கிய வீரராக திகழ்ந்து வந்த அந்த அணியின் ஆல் ரவுண்டர் ஜேம்ஸ் பால்க்னர் மிக சிறந்த முறையில் விளையாடி அதிக விக்கெட்களை எடுக்கும் வீரர்களில் ஒருவராக திகழ்ந்தார்.இவர் விளையாடிய காலங்கள் தான் பல முறை சிறப்பாக செயல்பட்டு பேட்டிங்கிலும் பந்துவீச்சில் ஆஸ்திரேலிய அணிக்கு மிகப்பெரும் பக்கபலமாக இருந்தார்.
இந்நிலையில் ஒருநாள் தொடரில் இங்கிலாந்து அணியின் ஆல்ரவுண்டர் பென் ஸ்டோக்ஸை இவர் மூன்று முறை அவுட் செய்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.மேலும் இவர் மீண்டும் ஆஸ்திரேலிய அணிக்காக களம் இறங்குவார் என்று ரசிகர்கள் பலரும் எதிர்பார்த்து காத்துக்கொண்டிருக்கின்றனர்.