இந்திய அணியின் வெற்றிகற டெஸ்ட் கேப்டனாக திகழ்ந்த விராட் கோலி 68 டெஸ்ட் போட்டிகளில் பங்கேற்று இந்திய அணிக்கு 40 டெஸ்ட் போட்டிகளில் வெற்றி பெற்றுக் கொடுத்துள்ளார்.
உலகின் தலைசிறந்த டெஸ்ட் தொடர் கேப்டனாக வலம் வந்த விராட் கோலி தென்னாபிரிக்க அணிக்கு எதிரான டெஸ்ட் தொடருக்கு பின் தனது கேப்டன் பதவியை ராஜினாமா செய்வதாக அறிவித்திருந்தார் ஒட்டுமொத்த கிரிக்கெட் ரசிகர்கள் மத்தியிலும் பெரும் வருத்தத்தை ஏற்படுத்தியது.
இந்தநிலையில் விராட் கோலி தனது கேப்டன்சிப்பில் செய்த நிகழ்வுகள் குறித்து பேசப்பட்டு வருகிறது, அந்த வகையில் டெஸ்ட் தொடருக்கான இந்திய அணியின் கேப்டனாக இருந்த விராட் கோலி தனது கேப்டன் பயணத்தில் எடுத்த சர்ச்சையான 3 முடிவுகள் பற்றி இன்று காண்போம்.
மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்திய ரஹானே மற்றும் புஜாரா ஆகிய வீரர்களுக்கு மீண்டும் மீண்டும் வாய்ப்பு அளித்தது.
2020 ஆம் ஆண்டு முதல் மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்தி வரும் இந்திய அணியின் அனுபவ வீரர்களான புஜாரா மற்றும் ரஹானே ஆகிய இரு வீரர்களுக்கும் இந்திய அணியின் முன்னாள் கேப்டன் விராட் கோலி அடுத்தடுத்த வாய்ப்புகளை வழங்கி வந்தார்.
கிட்டத்தட்ட ஒட்டுமொத்த கிரிக்கெட் வட்டாரமும் சேர்ந்து, இந்த இரண்டு வீரர்களை நீக்கிவிட்டு இளம் வீரர்களுக்கு வாய்ப்பு அளியுங்கள் என்று பலமுறை அறிவுரை வழங்கி அதனை எதையும் கேட்காமல் விராட் கோலி இந்த இரண்டு வீரர்களுக்கும் வாய்ப்பளித்தது அனைவருக்கும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியது.