உலகின் தலைசிறந்த அணி என்ற பாராட்டைப் பெற்ற இந்திய அணி நடைபெற்று முடிந்த உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டியில் மிக மோசமாக விளையாடி அனைவருடைய விமர்சனத்தையும் பெற்றுள்ளது.
தெளிவான திட்டமிடல், சரியான வீரர்களை தேர்ந்தெடுப்பது என அனைத்திலும் கோட்டை விட்ட இந்திய அணிக்கு பெரும்பாலான முன்னாள் வீரர்கள் மற்றும் கிரிக்கெட் வல்லுனர்கள் தேவையான அறிவுரை வழங்கி வருவதோடு யாரை இந்திய அணியின் தேர்ந்தெடுத்துக் கொள்ளலாம் என்றும் யோசனை கொடுத்து வருகின்றனர்.
அந்த வகையில் டெஸ்ட் தொடரில் வேகப் பந்துவீச்சில் மோசமாக விளையாடிய இந்தியா அணிக்கு இந்த மூன்று வேகப் பந்துவீச்சாளர்களை தேர்ந்தெடுத்து வாய்ப்பு கொடுத்து பார்க்கலாம் என கிரிக்கெட் வட்டத்தில் பேசப்பட்டு வருகிறது.
அர்ஷ்திப் சிங்.
லிமிடெட் ஒவர் போட்டிகளில் இந்தியா அணிக்காக மிகச் சிறப்பான முறையில் பந்துவீசி வரும் இந்திய அணியின் இளம் வேகம் பந்துவீச்சாளர் அர்ஷ்திப் சிங்.,ரெட் பால் போட்டிகளிலும் மிக சிறப்பான முறையில் பந்து வீசக்கூடிய திறமை படைத்தவர்.
இவர் இதுவரை 8 முதல் தர போட்டிகளில் பங்கேற்று 29 விக்கெட் கடை வைத்துள்ளார் இதனால் இவருக்கு எதிர்வரும் டெஸ்ட் போட்டியில் ஒரு வாய்ப்பு கொடுத்து பார்க்கலாம் என இந்திய அணிக்கு கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.