2011 உலகக்கோப்பைக்கு பிறகு அணியில் இருந்து ஓரங்கட்டப்பட்ட 3 முக்கிய வீரர்கள்
2011 உலக கோப்பையை இந்திய அணி வென்ற தினம் இன்று. இன்றைய தினத்தில் அந்த உலக கோப்பையை வெல்ல முக்கிய பங்காற்றியும் கூட, பெரிதாக கண்டுகொள்ளப்படாத 3 வீரர்களை பார்ப்போம்.
1. கவுதம் கம்பீர்
இலங்கைக்கு எதிரான இறுதி போட்டியில் சச்சின் மற்றும் சேவாக் ஆகிய இருவரும் தொடக்கத்திலேயே ஆட்டமிழந்தபோதிலும், அப்போதைய இளம் வீரர் கோலியுடன் இணைந்து மூன்றாவது விக்கெட்டுக்கு பார்ட்னர்ஷிப் அமைத்து இந்திய அணியை சரிவிலிருந்து மீட்டெடுத்ததுடன், 97 ரன்களை குவித்து இந்திய அணியின் வெற்றிக்கு முக்கிய காரணமாக திகழ்ந்தவர் கம்பீர் தான். ஆனால் தோனி அதன்பின்னர் 91 ரன்களை அடித்து சிக்ஸர் விளாசி போட்டியை முடித்துவைத்ததால் கம்பீரின் முக்கியமான இன்னிங்ஸை விட, தோனியின் இன்னிங்ஸை அனைவரும் புகழ ஆரம்பித்துவிட்டனர்.
ஆனால் கம்பீரின் இன்னிங்ஸ் மிக முக்கியமானது. அதுமட்டுமல்லாமல் அந்த உலக கோப்பையில் சச்சின் டெண்டுல்கருக்கு(481 ரன்கள்) அடுத்தபடியாக அதிக ரன்களை குவித்திருந்தது கம்பீர் தான். 4 அரைசதங்கள் உட்பட 393 ரன்களை குவித்து, உலக கோப்பையை வெல்ல முக்கிய காரணமாக திகழ்ந்தார்.