நடைபெற்றுக் கொண்டிருக்கிற காலண்டர் வருடத்தில் அதிக முறை 5 விக்கெட்களை வீழ்த்திய 3-வீரர்கள் பற்றி இங்கு காண்போம்.
இந்திய அணி மைதானங்கள் எப்பொழுதுமே சுழற்பந்து வீச்சுக்கு மிகவும் உதவியாக இருப்பதால் இந்திய மைதானத்தில் சுழற்பந்து வீச்சாளர்கள் தனது திறமையை வெளிப்படுத்தி எளிதாக விக்கெட்களை வீழ்த்தி இருக்கின்றனர், ஆனால் அதிலும் ஒரு சில சுழற்பந்து வீரர்கள் தான் சாதனை பட்டியலில் இடம் பெற்றுள்ளனர்.
அப்படி இந்திய அணிக்காக விளையாடி அதிக முறை 5-விக்கெட்டுகளை வீழ்த்திய 3சுழற்பந்து வீச்சாளர்கள் பற்றி இங்கு காண்போம்.
ஹர்பஜன் சிங்க்
இந்திய அணியின் அனுபவம் வாய்ந்த முன்னாள் சுழற்பந்து வீச்சாளர் ஹர்பஜன் சிங் தனது அபாரமான பந்து வீச்சின் மூலம் உலகின் முன்னணி பேட்ஸ்மேன்களில் விக்கெட்களையும் மிக எளிதாக வீழ்த்தி சாதனை படைத்துள்ளார்.
பலவேறு வேரியேஷன்களில் சுழற்பந்து வீச கூடிய திறமை படைத்த ஹர்பஜன் சிங் இந்த காலண்டர் வருடத்தில் ஆறு முறை 5-விக்கெட்டுகளை வீழ்த்தி நமது பட்டியலில் முதலிடத்தில் உள்ளார்.