நட்சத்திர வீரர் விராட் கோலியால் இந்திய அணியில் வாய்ப்பை இழந்த மூன்று வீரர்கள் பற்றி இங்கு காண்போம்.
கடந்த கால வரலாற்றில் ஒரு நட்சத்திர வீரரின் வருகையால் மற்றொரு நட்சத்திர வீரரின் வாழ்க்கை பாழாகியுள்ளது பலவற்றை கண்டுள்ளோம், உதாரணமாக விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் தோனியின் வருகையால் மற்றொரு விக்கெட் கீப்பர் பேட்ஸ்மனான தினேஷ் கார்த்திக் வாய்ப்பு பல சமயத்தில் பரிபோகியுள்ளது.
அதேபோன்று தற்போதைய இந்திய அணியின் நட்சத்திர பேட்ஸ்மனான விராட் கோலியால் மூன்றாவது இடத்தில் பேட்டிங் செய்யக்கூடிய திறமை படைத்த மூன்று வீரர்களின் வாய்ப்பு பறிபோய் கொண்டிருக்கிறது.
அப்படி விராட் கோலியால் வாய்ப்பை இழந்து தவிக்கும் மூன்று வீரர்கள் குறித்து இங்கு காண்போம்.
சஞ்சு சாம்சன்.
லிமிடெட் ஓவர் போட்டிகளுக்கான இந்திய அணியில் விளையாடும் அனைத்து தகுதியும் படைத்த நட்சத்திர வீரர்கள் சஞ்சு சாம்சன் இந்தியா அணியிலிருந்து புறக்கணிக்கப்பட்டு கொண்டே வருகிறார்.
இதற்கு முக்கிய காரணம் சஞ்சு சாம்சன் அதிகமாக மூன்றாவது இடத்தில் பேட்டிங் செய்வதுதான், ஏற்கனவே இந்திய அணியில் மூன்றாவது இடத்தில் பேட்டிங் செய்யக்கூடிய நட்சத்திர விராட் கோலி இருப்பதால் இவருக்கான இடம் மறுக்கப்படுகிறது என்று கிரிக்கெட் வல்லுனர்கள் தெரிவித்துள்ளனர்.