முதல் தொடரே கடைசி தொடரும்… இனி இந்திய அணியில் இடம்பிடிக்க வாய்ப்பே இல்லாத மூன்று வீரார்கள் !!

Prev1 of 3
Use your ← → (arrow) keys to browse

இலங்கைக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டிருந்த ஷிகர் தவான் தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி, இலங்கை அணியுடன் மூன்று ஒருநாள் போட்டிகள் மற்றும் மூன்று டி.20 போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்றது.

விராட் கோலி தலைமையிலான சீனியர் வீரர்கள் கொண்ட இந்திய அணி இங்கிலாந்து சென்றுள்ளதால், இலங்கை தொடருக்கான இந்திய அணி அதிகமான இளம் வீரர்களை கொண்டு உருவாக்கப்பட்டது.

பல வருடமாக தங்களது வாய்ப்புக்காக போராடி வந்த சூர்யகுமார் யாதவ், சந்தீப் வாரியர், கிருஷ்ணப்பா கவுதம், நிதிஷ் ராணா போன்ற பல வீரர்களுக்கு இந்த தொடரில் வாய்ப்பு கிடைத்தது, அதே போல் சேத்தன் சக்காரியா, தேவ்தட் படிக்கல், கெய்க்வாட் போன்ற இளம் வீரர்கள் பலருக்கும் இந்த தொடரில் வாய்ப்பு கிடைத்தது.

டி.20 உலகக்கோப்பை நெருங்கி வருவதால் இளம் வீரர்கள் அனைவரும் இந்த தொடரை பயன்படுத்தி தங்களை நிரூபித்து, டி.20 உலகக்கோப்பைக்கான இந்திய அணியிலும் இடம்பிடிப்பார்கள் என எதிர்பார்க்கப்பட்டது, ஆனால் சூர்யகுமார் யாதவ், ராகுல் சாஹர் போன்ற ஓரிரு வீரர்களை தவிர மற்றவர்கள் பெரிதாக சோபிக்கவில்லை. இதன் காரணமாக இலங்கை அணிக்கு எதிரான டி.20 தொடரையும் இந்திய அணி மோசமாக இழந்தது.

இந்தநிலையில், நீண்ட போராட்டத்திற்கு பிறகு இந்திய அணியில் கிடைத்த வாய்ப்பையும் வீணடித்ததால் இனி இந்திய அணியின் பக்கம் தலைக்காட்டவே வாய்ப்பு இல்லாத மூன்று வீரர்கள் குறித்து இங்கு பார்ப்போம்.

கிருஷ்ணப்பா கவுதம்;

ஐபிஎல் தொடருக்கான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியால் கிட்டத்தட்ட 10 கோடி ரூபாய் கொடுத்து ஏலத்தில் எடுக்கப்பட்ட கிருஷ்ணப்பா கவுதம், நடந்து முடிந்த இலங்கை அணிக்கு எதிரான மூன்றாவது ஒருநாள் போட்டியின் மூலம் இந்திய அணியில் கால் பதித்தார். தனது முதல் போட்டியிலேயே கிருஷ்ணப்பா கவுதம் விக்கெட்டுகள் வீழ்த்தியிருந்தாலும், இலங்கை அணியிடம் அவரது பந்துவீச்சு அவ்வளவாக எடுபடவில்லை. பேட்டிங்கிலும் சொல்லிக்கொள்ளும் அளவிற்கு செயல்படாத கிருஷ்ணப்பா கவுதமிற்கு இனி இந்திய அணியில் இடம் கிடைக்காது என்றே தெரிகிறது, அவரது வயதும் அதற்கு ஒத்துழைக்காது என்பது கூடுதல் தகவல்.

Prev1 of 3
Use your ← → (arrow) keys to browse

Mohamed:

This website uses cookies.