இனி காப்பத்த யாரும் கிடையாது… விராட் கோலியின் முடிவால் இனி இந்திய அணியில் இடம்பிடிக்க வாய்ப்பில்லாத மூன்று வீரர்கள் !!

Prev1 of 3
Use your ← → (arrow) keys to browse

டெஸ்ட் தொடருக்கான இந்திய அணியின்  கேப்டன் விராட் கோலி தென் ஆப்பிரிக்கா  அணிக்கு எதிரான டெஸ்ட் தொடர் முடிந்தவுடன் டெஸ்ட் தொடர் கேப்டன் பதவியில் இருந்து ராஜினாமா செய்வதாக அறிக்கை வெளியிட்டிருந்தார்.

விராட் கோலியின் இந்த திடீர் முடிவால் கிரிக்கெட் வட்டாரத்தில் மிகப்பெரும் சர்ச்சையாக வெடித்துள்ளது, மேலும் டெஸ்ட் தொடரில் தலை சிறந்த கேப்டன்களில் ஒருவராகத் திகழும் விராட் கோலி டெஸ்ட் தொடருக்கான இந்திய அணியிலிருந்து கேப்டன் பதவியை ராஜினாமா செய்தது ரசிகர்கள் மத்தியில் மிகப் பெரும் வருத்தத்தை ஏற்படுத்தியது.

மேலும் இந்த முடிவு ரசிகர்கள் மட்டுமில்லாமல் இந்திய கிரிக்கெட் வீரர்கள் ஒரு சிலர் மத்தியில் மிகப்பெரும் பேரதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது, ஏனென்றால் விராட் கோலி அதிகம் நம்பிக்கை வைக்கப்பட்டு அளிக்கப்பட்ட 3 வீரர்கள் விராட் கோலியின் இந்த முடிவுக்குப் பின் டெஸ்ட் தொடருக்கான இந்திய அணியில் இருந்து புறக்கணிக்கப் படுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

அஜிங்கியா ரஹானே

டெஸ்ட் தொடருக்கான இந்திய அணியின் ரெகுலர் வீரராக களமிறங்கப்படும் அஜிங்கியா ரஹானே, இந்திய அணியில் விராட் கோலி இல்லாத போது இந்திய அணி மிகவும் திறம்பட பலமுறை வழி நடத்தியுள்ளார். ஒரு காலகட்டத்தில் டெஸ்ட் தொடருக்கான இந்திய அணியின் கேப்டனாக ரஹானேவைதான் நியமிக்க வேண்டும் என்று பேசும் அளவிற்கு தனது சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியவர்.

அப்படிப்பட்ட அஜிங்கியா ரஹானே கடந்த சில வருடங்களாகவே எதிர்பார்த்த அளவிற்கு சிறப்பாக செயல்படவில்லை இருந்தபோதும் விராட் கோலியின் தயவால் டெஸ்ட் தொடருக்கான இந்திய அணியில் மீண்டும் மீண்டும் களமிறங்குவதற்கு அனுமதிக்கப்பட்டது. இந்தநிலையில் விராட் கோலி ஓய்வு அறிவித்ததால் இவருக்கு எதிர்காலங்களில் வாய்ப்பு அளிக்கப்படாது என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Prev1 of 3
Use your ← → (arrow) keys to browse

Mohamed:

This website uses cookies.