2021 ஐபிஎல் தொடர் வெற்றிகரமாக நடைபெற்று முடிந்த நிலையில் இந்த தொடரில் சென்னை அணி தனது நானாக டைட்டில் பட்டத்தை வெற்றி பெற்று வரலாற்று சாதனை படைத்தது.
இந்நிலையில் இந்த ஐபிஎல் தொடர் முடிந்தவுடன் 2022 ஐபிஎல் தொடருக்கான திட்டம் அனைத்து அணிகளுக்குள் நடைபெற்று வருகிறது, மேலும் 2022 ஐபிஎல் தொடரில் புதிதாக இரண்டு அணிகள் இணைக்கப்படுவது ஒவ்வொரு அணியும் புது உத்திகளை கையாளும் என்று எதிர்பார்க்கப்படுகிறது இந்நிலையில் பிசிசிஐ விதிப்படி ஒரு அணி 3 வீரர்களை மட்டும் தான் தக்க வைத்துக்கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்ட நிலையில் ஒவ்வொரு அணியும் எந்த வீரரை தக்கவைத்துக் கொள்ளலாம் என்று திட்டமிட்டு வருகிறது.
இன்னிலையில் சாம்பியன் பட்டம் வென்ற சென்னை அணி இந்த 3 வீரர்களை தான் தக்க வைத்துக் கொள்ளும் என்று எதிர்பார்க்கப்படுகிறது,அப்பேர்ப்பட்ட 3 வீரர்களை பற்றி இங்கு காண்போம்.
எம்எஸ் தோனி
சென்னை அணியின் வெற்றிகற கேப்டனும் எம்எஸ் தோனி 2021 ஐபிஎல் தொடருக்கு பின் ஓய்வு அறிவிப்பார் என்று அனைவராலும் பேசப்பட்டு வந்தது, ஆனால் நான் 2022 ஐபிஎல் தொடரிலும் தொடர்வேன் என்று எம்எஸ் தோனி சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் தெரிவித்திருந்தார், மேலும் அந்த அணியின் நிறுவனர் என் ஸ்ரீனிவாசன் சிஎஸ்கே இல்லாமல் தோனி இல்லை தோனி இல்லாமல் சிஎஸ்கே இல்லை என்று ஓப்பனாக பேசியதால் 2022 ஐபிஎல் தொடரிலும் தோனி சென்னை அணியில் விளையாடுவார் என்று ஊர்ஜிதமானது.
தோனி ஓய்வு அறிவிக்கும் வரை நிச்சயம் சென்னை அணியின் கேப்டனாக தோனி தான் இருப்பார் என்பதில் எந்த ஒரு சந்தேகமும் கிடையாது, இதனால் சென்னை அணி 2022 ஐபிஎல் தொடரில் முதல் ஆளாக தோனியை தக்கவைத்துக்கொள்ளும் என்பதில் எந்த ஒரு சந்தேகமும் கிடையாது.