இந்தியா, வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையே 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் நடைபெற்று வருகிறது. முதல் ஆட்டம் மழையால் ரத்தானது. இரண்டாவது போட்டியில் டக் வொர்த் லூயிஸ் முறைப்படி இந்தியா 59 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது.
ஷிகர்தவான்
வெஸ்ட் இண்டீஸுக்கு எதிரான தொடரில் பயங்கரமாக சொதப்பி வருகிறார் தொடக்க ஆட்டக்காரர் ஷிகர் தவான். டி20 தொடரில் முதல் ஆட்டத்தில் 1 ரன், இரண்டாவது ஆட்டத்தில் 23 ரன்கள், மூன்றாவது ஆட்டத்தில் 3 ரன்கள் என மோசமாகவே விளையாடினார் தவான்.
தொடர்ந்து, ஒருநாள் தொடரின் இரண்டாவது ஆட்டத்தில் வெறும் 2 ரன்கள் மட்டுமே எடுத்து அவுட் ஆனார். கடைசியாக நடைபெற்ற போட்டியில் தன் பங்கிற்கு 36 பந்துகளில் 36 ரன்கள் மட்டுமே எடுத்தார்
இந்திய அணியில் மிடில் ஆர்டர் பெரிய சிக்கலாக இருந்து வந்த நிலையில், ஸ்ரேயாஸ் ஐயர் காப்பாற்றி வருகிறார். இந்நிலையில், தொடக்க ஆட்டக்காரர் ஷிகர் தவான் சொதப்பி வருவது அணிக்குப் பெரும் பின்னடைவாகக் கருதப்படுகிறது.
இங்கிலாந்து அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் சொதப்பியதால் டெஸ்ட் அணியில் இருந்தும் அவர் கழற்றிவிடப்பட்டார். தற்போது டி20 மற்றும் ஒருநாள் போட்டிகளில் சொதப்பி இருப்பதால் இனி அவர் இந்திய அணிக்காக விளையாடுவது சற்று கேள்விக்குறியாகவே இருக்கிறது.