ஒருநாள் தொடரில் இருந்து 3 முக்கிய வீரர்களுக்கு ஓய்வு அளிக்கப்பட இருப்பதாக பிசிசிஐ தரப்பு தகவல்கள் வெளிவருகின்றன. இதற்கான முழு காரணம் என்னவென்றும் தற்போது தெரியவந்திருக்கிறது.
இந்தியா சுற்றுப்பயணம் மேற்கொண்டிருக்கும் இங்கிலாந்து அணி முதல் கட்டமாக நான்கு டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது. இதற்கு அடுத்ததாக ஐந்து டி20 போட்டிகளிலும், அதனையடுத்து 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரிலும் விளையாட இருக்கிறது. டி20 தொடருக்கான இந்திய அணி ஏற்கனவே அறிவிக்கப்பட்டுவிட்டது.
இந்நிலையில் விரைவில் ஒருநாள் போட்டிக்கான அணி அறிவிக்கப்பட இருப்பதாக தகவல்கள் வெளிவருகின்றன. இதில் முக்கிய மூன்று பேருக்கு ஓய்வு அளிக்கப்பட இருப்பதாக தகவல்கள் வெளிவருகின்றன. உத்தேசமாக ரோகித் சர்மா, ரிஷப் பண்ட் மற்றும் வாஷிங்டன் சுந்தர் ஆகியோரின் பெயர்கள் இருப்பதாக பிசிசிஐ தரப்பு தகவல்கள் வெளிவருகின்றன. இதற்கான காரணமும் தெரியவந்திருக்கிறது.
ரிஷப் பண்ட், ரோகித் சர்மா மற்றும் வாசிங்டன் சுந்தர் மூவரும் ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் விளையாடி முடித்த பிறகு, ஒரு சில நாட்களிலேயே இங்கிலாந்து அணிக்கு எதிரான டெஸ்ட் தொடருக்கும் தயாராகத் தொடங்கிவிட்டனர். ஐபிஎல் தொடருக்கு பிறகு தொடர்ந்து பயோ-பபுள் வளையத்திற்குள் இருந்து வருவதால் இறுக்கமான மன நிலையில் அவர்களுக்கு இருப்பதற்கான வாய்ப்புகள் அதிகமாக இருக்கின்றன.
இங்கிலாந்து டெஸ்ட் தொடர் முடிவடைந்த பிறகு, டி20 தொடர் ஒருநாள் போட்டிக்கான தொடர், அதன்பிறகு டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டி மற்றும் இங்கிலாந்து அணிக்கு எதிரான டெஸ்ட் தொடர் என அடுத்தடுத்துப் போட்டிகள் இடைவிடாமல் இருப்பதால் மேலும் மேலும் அவர்கள் இந்த பயோ-பபுள் வளையத்திற்குள் இருப்பதற்கான சூழ்நிலை ஏற்பட்டுவிடும். இவர்களின் மனநிலை பாதிப்பிற்குள்ளாகும். இதனை கருத்தில் கொண்டு வருகிற இங்கிலாந்து அணிக்கு எதிரான ஒருநாள் தொடரில் மூவருக்கும் ஓய்வு அளிக்கப்பட இருப்பதாக தகவல்கள் வருகின்றன.
இதன் அடிப்படையிலேயே பும்ராஹ்விற்கு இதற்கு முன்னர் சில போட்டிகளில் ஓய்வு அளிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. இவர்கள் மட்டுமல்லாது அடுத்தடுத்த தொடர்களின் ஒரு சில போட்டிகளில் தொடர்ந்து விளையாடி வரும் மேலும் சில வீரர்களுக்கு ஓய்வு அளித்து நல்ல மனநிலையை உருவாக்க பிசிசிஐ திட்டமிட்டு வருகிறது.