இந்திய டெஸ்ட் அணியின் மிக முக்கியமான வீரர்களில் ஒருவரான ரஹானே கிட்டத்தட்ட கடந்த இரண்டு வருடங்களாகவே மிக மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறார்.
ரஹானே தொடர்ந்து சொதப்பினாலும், இந்திய நிர்வாகமோ அவர் மீது நம்பிக்கை வைத்து அதிகமான வாய்ப்புகள் வழங்கி வருகிறது, ஆனால் ரஹானேவோ ஒரு போட்டியில் ஓரளவிற்கு விளையாடிவிட்டால் அடுத்த பல போட்டிகளில் ஒற்றை இலக்க ரன்னை கூட தாண்டாமல் விக்கெட்டை இழந்து இந்திய அணிக்கு ஏமாற்றத்தை மட்டுமே கொடுத்து வருகிறார்.
ரஹானே தொடர்ந்து ஏமாற்றத்தை மட்டுமே கொடுத்து வரும் நிலையில், மறுபுறம் ஹனுமா விஹாரி, ஸ்ரேயஸ் ஐயர் போன்ற இளம் வீரர்கள் தங்களுக்கு கிடைக்கும் ஓரிரு வாய்ப்புகளை கூட சரியாக பயன்படுத்தி வருகின்றனர், ஆனாலும் ரஹானே, புஜாரா போன்ற சீனியர் வீரர்கள் இருப்பதால் ஹனுமா விஹாரி, ஸ்ரேயஸ் ஐயர் போன்ற இளம் வீரர்கள் இன்னும் சில காலம் காத்திருந்து தான் ஆக வேண்டும் என ராகுல் டிராவிட்டே ஓபனாக பேசும் நிலையே இந்திய அணியில் நிலவி வருகிறது.
அடுத்த வருடம் நடைபெற உள்ள டெஸ்ட் சாம்பியன்சிப் இறுதி போட்டியை கருத்தில் கொண்டு அடுத்தடுத்த தொடர்களில் இருந்து ஒருவேளை ரஹானே நீக்கப்பட்டால் அவருக்கு பதிலாக இந்திய அணியில் இடம்பிடிக்க வாய்ப்புள்ள மூன்று வீரர்கள் குறீத்து இங்கு பார்ப்போம்.
ஹனுமா விஹாரி;
மிடில் ஆர்டரில் தொடர்ந்து மிக சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி ஹனுமா விஹாரிக்கு அடுத்தடுத்த தொடர்களில் இந்திய அணி நிச்சயம் முக்கியத்துவம் கொடுக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஹனுமா விஹாரி தனக்கு கிடைத்த அனைத்து வாய்ப்புகளையும் மிக சரியாக பயன்படுத்தி வருகிறார்.