முதுகு தண்டில் ஏற்பட்ட காயம் காரணமாக பந்துவீசுவதை தவிர்த்த ஹர்டிக் பாண்டியா 2021 ஐபிஎல் தொடரில் எதிர்பார்த்த அளவிற்கு விளையாடவில்லை, இருந்தபோதும் உலக கோப்பை தொடருக்கான இந்திய அணியில் இடம் பெற்றிருந்த இவர் ஆல்-ரவுண்டராக செயல்படவில்லை என்றாலும் இந்திய அணியின் பினிசராக செயல்படுவார் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.
ஆனால் இவர் பாகிஸ்தானுக்கு எதிராக எதிர்பார்த்த அளவிற்கு விளையாடவில்லை, இதன்காரணமாக வருகிற அக்டோபர் 31 (நாளை) நியூசிலாந்துக்கு எதிராக களமிறக்கபடமாட்டார் என்று எதிர்பார்க்கப்படுகிறது, இந்நிலையில் இவருக்கு பதில் இந்த மூன்று வீரர்களில் ஒருவர் களம் இறங்கினால் இந்திய அணி பலம் வாய்ந்த அணியாக திகழ்வதற்கு அதிக வாய்ப்புள்ளது என்று கிரிக்கெட் வல்லுநர்கள் கருதுகின்றனர்.
அப்படிப்பட்ட 3 வீரர்களைப் பற்றி இங்கு காண்போம்.
ஷர்துல் தாகூர்
விக்கெட்டை டேகிங் திறமை அதிகம் இருக்கும் வீரராக கருதப்படும் இந்திய அணியின் இளம் ஆல்ரவுண்டர் ஷர்துல் தாகூர் பேட்டிங் மற்றும் பந்து வீச்சில், தான் யார் என்பதை கிரிக்கெட் உலகுக்கு பலமுறை தெரியப்படுத்தியுள்ளார்.
இவர் நியூசிலாந்துக்கு எதிரான போட்டியில் ஹர்திக் பாண்டியாவிற்கு பதில் ஒரு நல்ல தேர்வாக இருப்பதற்கு அதிக வாய்ப்புள்ளது, ஒருவேளை இவர் தேர்ந்தெடுக்கப்பட்டால், ஜடேஜா ஆறாவது இடத்தில் களம் இறங்குவதற்கான அதிக வாய்ப்பு உள்ளது, அப்படி மட்டும் நடந்தால் இந்திய அணியின் பேட்டிங் ஆர்டர் மிகவும் பலம் வாய்ந்ததாக மாறிவிடும் என்று கிரிக்கெட் வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர்.