காயம் காரணமாக பும்ராஹ் டி.20 உலகக்கோப்பை தொடரில் இருந்து விலக உள்ள நிலையில், அவருக்கு பதிலாக இந்திய அணியில் இடம்பிடிக்க வாய்ப்புள்ள மூன்று வீரர்கள் குறித்து இங்கு பார்ப்போம்.
உலகக்கோப்பையை வெல்ல வேண்டும் என்பது அனைத்து அணிகளின் கனவாக இருக்கும் என்பதால், ஒவ்வொரு அணியும் டி.20 உலகக்கோப்பை தொடருக்காக தீவிரமாக தயாராகி வருகின்றன.
கடந்த டி.20 உலகக்கோப்பை தொடரில் மோசமான தோல்விகளை சந்தித்து லீக் சுற்றோடு வெளியேறிய இந்திய அணி, இந்த முறையாவது கோப்பையை வெல்ல வேண்டும் என இந்திய ரசிகர்கள் மிகுந்த ஆவலுடன் காத்துள்ளனர், ஆனால் இந்திய அணியிலோ பல பிரச்சனைகள் இன்னும் தீர்க்கப்படாமலே உள்ளது. விராட் கோலி மற்றும் சூர்யகுமார் யாதவின் பொறுப்பான ஆட்டத்தால் பல வருடமாக நிலவி வந்த மிடில் ஆர்டர் பிரச்சனை தற்போது ஓரளவிற்கு சரியாகியிருந்தாலும், பந்துவீச்சில் இந்திய அணி பலவீனமாகவே உள்ளது. பேட்டிங், பந்துவீச்சு என இரண்டிலும் இந்திய அணிக்கு பலம் சேர்த்து வந்த ஜடேஜா காயம் காரணமாக டி.20 உலகக்கோப்பை தொடரில் இருந்து விலகியிருந்த நிலையில், இந்திய அணியின் மிக முக்கிய பந்துவீச்சாளரான பும்ராஹ்வும் காயம் காரணமாக டி.20 உலகக்கோப்பை தொடரில் இருந்து விலகும் நிலை ஏற்பட்டுள்ளது.
காயத்தால் தென் ஆப்ரிக்கா அணியுடனான நடப்பு தொடரில் இருந்து விலகிய பும்ராஹ், டி.20 உலகக்கோப்பை தொடரில் இருந்தும் விலகினால் அவருக்கு பதிலாக இந்திய அணியில் இடம்பிடிக்க வாய்ப்புள்ள மூன்று வீரர்கள் குறித்து இங்கு பார்ப்போம்.
1 – முகமது ஷமி;
பும்ராஹ்விற்கு பதிலாக இந்திய அணியில் இடம்பிடிக்க வாய்ப்புள்ள வீரர்களில் சீனியர் வீரரான முகமது ஷமியே முதன்மையானவராக உள்ளார். பும்ராஹ்வை போலவே அதிக அனுபவமுடைய வீரரான முகமது ஷமிக்கு இடம் கொடுப்பதே சரியானதாக இருக்கும் என முன்னாள் வீரர்கள் பலரும் இந்திய அணிக்கு அட்வைஸ் கொடுத்து வருகின்றனர்.