கொரோனா அச்சுறுத்தலின் காரணமாக சமீபமாக இந்தியாவில் நடைபெற்று வந்த 2021 ஐபிஎல் போட்டி தொடர் பாதியிலேயே கைவிடப்பட்டது இந்த போட்டி நடைபெறுமா?, அல்லது இந்த 2021 போட்டி முற்றிலுமாக நிறுத்தப்படுமா என்று ரசிகர்களிடத்தில் பெருத்த சந்தேகம் ஏற்பட்டிருந்த நிலையில் இந்தப் போட்டி இலங்கை, இங்கிலாந்து அல்லது துபாய் அமீரகத்தில் நடைபெறுவதற்கான அதிக வாய்ப்பு உள்ளது என்று பிசிசிஐ மறைமுகமாக தெரிவித்துள்ளது.
இந்நிலையில் ஐபிஎல் ஆரம்பித்த காலத்திலிருந்தே சென்னை அணியின் கேப்டனாக திகழ்ந்துள்ளது மகேந்திர சிங் தோனி இன்னும் ஒரு சில ஆண்டுகளில் ஐபிஎல் தொடரில் இருந்து தனது ஓய்வு அறிவிப்பார் என்று கிரிக்கெட் வல்லுனர்களுக்கு இடையே பேசு பொருளாக உள்ளது,இவர் இந்திய அணிக்காகவும் சென்னை அணிக்கும் மிக சிறந்த முறையில் தலைமை ஏற்று பல வெற்றிகளை பெற்று கொடுத்து இருந்தாலும் ஐபிஎல் தொடரிலேயே அதிக வயதான வீரராக தோனி இருந்து வருகிறார், இதன் காரணமாக இவர் ஐபிஎல் தொடரிலிருந்து வெகு சீக்கிரம் தனது ஓய்வை அறிவிப்பார் என்று கிரிக்கெட் வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர்
இந்நிலையில் அவரது ஓய்வுக்குப் பின் சென்னை அணியை தலைமையேற்க தகுதியான 3 வீரர்களைப் பற்றி இங்கு காண்போம்
ரவீந்திர ஜடேஜா
இந்திய அணியின் அதிரடி ஆல்ரவுண்டர் ரவீந்திர ஜடேஜா 2012 முதல் சென்னை அணியின் முக்கிய வீரராக திகழ்ந்து வருகிறார்,இவர் பேட்டிங் பவுலிங் மற்றும் ஃபீல்டிங் ஆகிய அனைத்திலும் மிக சிறப்பாக செயல்பட்டு சென்னை அணிக்கு பலமுறை வெற்றியை தேடி கொடுத்துள்ளார்.இவர் 191 ஐபிஎல் போட்டிகளில் பங்கேற்று 2290 ரன்கள் எடுத்துள்ளார் மேலும் 120 விக்கெட்களை வீழ்த்தியுள்ளார். குறிப்பாக 76 கேட்ச்களும் 23 ரன் அவுட்களும் செய்து அசத்தி உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
அதிரடி ஃபினிசராக திகழும் ரவீந்திர ஜடேஜா சென்னை அணிக்கு கேப்டனாக பொறுப்பேற்று அணியை வழி நடத்துவதற்கு மிகவும் தகுதியான வீரர் என்று கிரிக்கெட் வல்லுனர்கள் பெரும்பாலானோர் கருத்து தெரிவித்துள்ளனர்.
சாம் கரன்
2020 முதல் சென்னை அணிக்காக விளையாடி வரும் சாம் கரன் ஒரு மிகச்சிறந்த ஆல்-ரவுண்டராக திகழ்ந்து வருகிறார், 22 வயது ஆகும் இங்கிலாந்து அணியின் இளம் ஆல்-ரவுண்டர் சென்னை அணிக்காக சிறப்பாக விளையாடி பல வெற்றிகளை பெற்றுக் கொடுத்துள்ளார், இவரின் அபரிவிதமான பார்ம் கிரிக்கெட் வல்லுநர்கள் இடையே பேசு பொருளாக உள்ளது மேலும் பெற்றவர்களில் மிக சிறப்பாக பந்து வீச கூடிய சாம்கரன் சென்னை அணி கேப்டனாக திகழ்வதற்கு அனைத்து விதமான தகுதி உள்ளது என்று கிரிக்கெட் வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர்.
சுரேஷ் ரெய்னா
சின்னத் தல என்று அழைக்கப்படும் சுரேஷ் ரெய்னா சென்னை அணியின் முக்கியமான வீரராக திகழ்ந்து வருகிறார், இவர் சென்னை அணி கேப்டனாக திகழ்வதற்கு அதிகமான வாய்ப்புள்ளது என்று கிரிக்கெட் வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர்,இதற்கு முன் 2012 ஒருமுறை தோனி இவரிடம் கேப்டன் பொறுப்பை கொடுத்து விட்டு வெறும் விக்கெட் கீப்பிங் மட்டும் செய்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
சுரேஷ் ரெய்னா ஐபிஎல் தொடர் அதிகமான ரன்களை எடுத்த வீரர்கள் பட்டியலில் மூன்றாம் இடத்தில் உள்ளார் இவர் 195 போட்டிகளில் பங்கேற்று 5491 ரன்களில் அடித்துள்ளார் அதில் ஒரு சதமும் 39 அரை சதமும் அடங்கும்.