கை விரலில் ஏற்பட்ட காயம் காரணமாக ஷிகர் தவான் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் இருந்து விலகி உள்ள நிலையில் அவரது இடத்தை யார் நிரப்புவது யார் என்ற எதிர்பார்ப்பு கிளம்பியுள்ளது.
உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் இருந்து கை விரலில் ஏற்பட்ட காயம் காரணமாக ஷிகர் தவான் விலகி உள்ளார். இதனால் அவருக்கு பதில் தொடக்க வீரராக யார் களம் இறக்கப்படுவார் என்பது குறித்து இந்திய ரசிகர்களிடையே பெரும் கேள்வி எழுந்துள்ளது.
இதுகுறித்து ட்விட்டர், பேஸ்புக் போன்ற சமூக வலைதளங்களில் ரசிகர்கள் தங்களுக்கு மிகவும் விருப்பமுள்ள கிரிக்கெட் வீரர்களின் பெயர்களை இந்திய கிரிக்கெட் வாரிய சங்கத்திற்கு பரிந்துரைத்த வண்ணம் உள்ளனர்.
உலகக்கோப்பையில் இந்திய அணியின் தவானுக்கு பதிலாக ஷ்ரேயாஸ் அய்யர், அம்பதி ராயுடு, ரிஷப் பந்த் ஆகிய வீரர்களில் யாரேனும் ஒருவரை தெர்வு செய்ய வாய்ப்புள்ளது.
இந்திய ரசிகர்கள் அணியில் சேர்க்க விருப்பம் தெரிவித்துள்ள வீரர்களின் கிரிக்கெட் விவரங்கள் சில பின்வருமாறு:-
ஷ்ரேயாஸ் அய்யர்
இந்திய அணிக்காக 6 ஒருநாள் போட்டிகளில் பங்கேற்று 210 ரன்கள் சேர்த்துள்ளார். மேலும் 62 ஐபிஎல் போட்டிகளில் களமிறங்கி 1681 ரன்கள் எடுத்துள்ளார். 6 போட்டிகளில் மட்டுமே விளையாடினாலும், உள்ளூர் தொடர்களில் தொடர்ச்சியாக சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். மேலும், மிடில் ஆர்டர் வரிசையில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தக் கூடியவர். உலகக்கோப்பைக்கான அணித்தேர்வின்போது இவரது பெயரும் பரிந்துரையில் இருந்தது. ஐபிஎல் தொடரில் கேப்டன் பதவியோடு, மிடில் ஆர்டர் வரிசையில் களமிறங்கி சிறப்பாக விளையாடியதால் வாய்ப்பு வழங்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.