இங்கிலாந்து சென்றுள்ள இந்திய அணி 3 டி20 போட்டிகள், 3 ஒருநாள் போட்டிகள் மற்றும் 5 டெஸ்ட் போட்டிகள் ஆட இருக்கின்றன.
டி20 தொடரில் இந்திய அணி 2-1 என்ற கணக்கில் வென்றது. முதல் போட்டியில் கே எல் ராகுல் சதம் விளாசி அசத்தினார். இரண்டாவது போட்டியில் இந்திய அணி தோல்வி அடைந்தாலும், 3வது போட்டியில் ரோஹித் சர்மாவின் அபார சதத்தால் இந்திய அணி வெற்றி பெற்று தொடரையும் கைப்பற்றியது.
அதைத்தொடர்ந்து ஒருநாள் தொடரின் முதல் போட்டியில் ரோஹித் சர்மா சதம் விளாசி அதே நிலையை தொடர்ந்தார். இரண்டாவது போட்டியில் இந்திய அணி சரணடைந்தது. 3வது போட்டி நாளை துவங்க இருக்கிறது.
லிமிடெட் ஓவர் போட்டிகளில் இந்திய அணி சிறப்பாக ஆடினாலும், இறுதியாக நடக்க இருக்கும் டெஸ்ட் தொடரில் சொதப்பினால், இதற்க்கு முன் செய்த அனைத்தும் வீணாகியது போல் ஆகிவிடும்.
இந்திய அணியை பலப்படுத்த தேர்வுக்குழு சில முயற்சிகளை செய்ய முற்பட்டுக்கொண்டு இருக்கிறது. காயம் காரணமாக லிமிடெட் ஓவர்களில் பும்ராஹ் ஆடவில்லை. அவர் டெஸ்ட் தொடருக்குள் குணமடையவேண்டிய கட்டாயம் உள்ளது. இல்லையெனில், தேர்வுக்குழு சரியான முடிவை எடுத்தே ஆகா வேண்டும்.
மேலும், பேட்டிங் வரிசையை பலப்படுத்த சில மாற்றங்களையும் கொண்டுவர நிர்வாகம் முடிவெடுத்துவருகிறது. அப்படி, இளம் வீரர்களை கொண்டுவரும் பட்சத்தில், அவர்கள் யார் என்பதை இனி காணலாம். முக்கியமான மூவர் முறையே
1. பிரிதிவி ஷா
இளம் வீரர் பிரிதிவி 14 வயதில் ஹாரிஸ் ஷீல்டு போட்டியில் 546 ரன்கள் குவித்து அசத்தினார். மேலும், இளம் வயதில் துலீப் கோப்பையில் சதம் விளாசி, மிக இளம் வயதில் இந்த சாதனையை நிகழ்த்தியவர் என்ற பெருமையையும் பெற்றார்.
இந்தியா ஏ அணியில் இங்கிலாந்தில் நடைபெற்ற முத்தரப்பு தொடரிலும் இரண்டு சதங்கள் அடித்தார். கேப்டன் பொறுப்பில் இருந்து அண்டர் 19 உலகக்கோப்பையும் பெற்று தந்துள்ளார். இதனால் பேட்டிங் பலப்படுத்த இவரை டெஸ்ட் அணியில் சேர்க்க வாய்ப்பு உள்ளது.