கொரோன அச்சுறுத்தலின் காரணமாக 2020 ஆண்டு கிரிக்கெட் போட்டிகள் அந்த அளவிற்கு நடைபெறவில்லை, இதனால் கிரிக்கெட் வீரர்களின் உடல் தகுதி மற்றும் மன நிலை பாதிக்கப்பட்டது என்று கூறலாம். இதன்காரணமாக இவர்களால் சிறப்பாக கிரிக்கெட்டில் கவனம் செலுத்த முடியா வில்லை, குறிப்பாக இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி 2019ஆம் ஆண்டு முதல் இதுவரை ஒரு சதம் கூட அடிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் 2020ஆம் ஆண்டு முதல் சர்வதேச தொடரில் அதிகமான சதங்களை அடித்த 3 வீரர்கள் பற்றி இங்கு காண்போம்.
பவுல் ஸ்ட்ரிலிங் மற்றும் சீன் வில்லியம்
ஜிம்பாவே அணியின் அதிரடி பேட்ஸ்மேன் சீன் வில்லியம்ஸ் 2020ஆம் ஆண்டு முதல் நடைபெற்ற சர்வதேச போட்டியில் 4 சதங்களை அடித்து சாதனை படைத்துள்ளார். மேலும் ஜிம்பாப்வே அணியின் முக்கிய வீரராக திகழும் வில்லியம் 2019ஆம் ஆண்டு முதல் ஜிம்பாப்வே அணியின் கேப்டனாக பொறுப்பேற்று அந்த அணியில் சிறப்பாக வழி நடத்தி வருகிறார். குறிப்பாக ஆப்கானிஸ்தானுக்கு எதிராக நடைபெற்ற தொடரில் அடுத்தடுத்து சதங்களை அடித்து சாதனை படைத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் இவரை தொடர்ந்து அயர்லாந்து அணியில் பவுண்ட் ஸ்டெர்லிங் 2020ஆம் ஆண்டு முதல் சர்வதேச தொடரில் 4 சதங்களை அடித்து அசத்தியுள்ளார். மேலும் டெஸ்ட் தொடரில் அயர்லாந்து அணிக்காக வாய்ப்பளிக்கபடாத ஸ்டெர்லிங் ஒருநாள் தொடர்களில் அந்த அணியின் முக்கிய வீரராக திகழ்ந்து வருகிறார் என்பது குறிப்பித்தக்கதாகும்.