கடந்த 2007ம் ஆண்டு அறிமுகம் செய்யப்பட்ட டி.20 போட்டிகளுக்கான உலகக்கோப்பை ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரும் வரவேற்பை பெற்றது. இதுவரை ஆறு டி.20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர்கள் நடைபெற்றுள்ளது. 2007ம் ஆண்டு நடைபெற்ற முதல் தொடரிலேயே இந்திய அணி கோப்பையை வென்று அசத்தியது. அதே போல் விண்டீஸ் அணி 2 முறையும், பாகிஸ்தா, இங்கிலாந்து மற்றும் இலங்கை அணிகள் தலா ஒரு முறையும் கோப்பையை வென்றுள்ளன.
கொரோனாவின் கோரதாண்டவம் காரணமாக கடந்த வருடம் நடைபெற வேண்டிய டி.20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரானது, இந்த வருடம் ஒத்தி வைக்கப்பட்டது. மொத்தம் 16 அணிகள் பங்குபெற உள்ள டி.20 உலகக்கோப்பை தொடர் அக்டோபர் – நவம்பர் மாதத்தில் துபாய் மற்றும் ஓமனில் வைத்து நடத்தப்பட முடிவு செய்யப்பட்டுள்ளது.
இந்நிலையில் உலகக் கோப்பை தொடர் நெருங்கிவரும் நிலையில் டி20 தொடர் சம்பந்தமான பல சுவாரஸ்யமான தகவல்களும் பேசப்பட்டு வருகிறது. இந்நிலையில் டி20 தொடரில் கேப்டனாக இருந்து அதிக ரன்களை அடித்த 3 கேப்டன்கள் பற்றி இங்கு காண்போம்.