உலகக் கோப்பை தொடரில் ரவீந்திர ஜடேஜாவை விட அக்சர் பட்டேல் சிறந்த வீரர் என்பதற்கான மூன்று காரணங்கள்.
தேவையில்லாத காரணங்களால் காலில் காயத்தை ஏற்படுத்திக் கொண்டு உலகக்கோப்பை தொடருக்கான இந்திய அணியில் இருந்து விலகிய ரவீந்திர ஜடேஜாவிற்கு பதில் அக்சர் பட்டேல் தேர்வு செய்யப்பட்டார்.
ஜடேஜா இல்லாதது உலகக்கோப்பை தொடருக்கான இந்திய அணியில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும் என்று பலர் கூறி வந்தாலும் ஜடேஜாவை விட அக்சர் பட்டேல் உலக கோப்பை தொடருக்கான இந்திய அணிக்கு உதவியாக இருப்பார் என்றே தெரிகிறது.
அந்த வகையில் ரவீந்திர ஜடேஜாவை விட அக்சர் பட்டேல் உலகக்கோப்பை தொடருக்கான இந்திய அணியில் சிறந்த வீரராக இருப்பார் என்பதற்கான மூன்று காரணங்கள் பற்றி இன்று காண்போம்.
பவர் பிளே ஓவர்களில் பந்து வீசும் திறமை.
ரவீந்திர ஜடேஜா பவர் பிளே இல்லாத ஓவர்களில் மிகச் சிறந்த முறையில் பந்துவீசி விக்கெட்டை வீழ்த்தினாலும், இவர் பவர் பிளே ஓவர்களில் பெரிய அளவில் பந்து வீசியது கிடையாது.
ஆனால் அக்சர்பட்டேல் பவர் பிளே ஓவர்களில் மிகச் சிறப்பாக பந்து வீசி நல்ல ரெகார்ட் வைத்துள்ளார். மேலும் சமீபத்தில் ரோஹித் சர்மாவால் அதிக முறை பவர் பிளேயில் பந்து வீசுவதற்கு பயன்படுத்தப்பட்டார் என்பதும் குறிப்பிடத்தக்கது.