உலக கோப்பை தொடர்கான இந்திய அணியில் தீபக் சஹருக்கு வாய்ப்பு கிடைக்காமல் போனதற்கான மூன்று காரணங்கள்.
லிமிடெட் ஓவர் போட்டிகளில் மிக சிறப்பான பந்துவீச்சை வெளிப்படுத்தும் இந்திய அணியின் இளம் வேகப் பந்துவீச்சாளர் தீபக் சஹர் வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான தொடரில் கையில் ஏற்பட்ட காரணம் காரணமாக நீண்ட ஓய்வில் இருந்தார்.
ஜிம்பாவே அணிக்கு எதிரான டி20 போட்டியில் மீண்டும் இந்திய அணியில் இடம் பிடித்து சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய தீபக்சஹருக்கு ஆசிய கோப்பையில் இடம் கிடைத்தது, ஆனால் ஆசிய கோப்பையில் இவர் சொல்லிக் கொள்ளும் அளவிற்கு சிறப்பாக செயல்படவில்லை.
இந்த நிலையில் இவருடைய திறமையின் அடிப்படையில் உலககோப்பை தொடருக்கான இந்திய அணியில் இவருக்கு வாய்ப்பு கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் இவரை ரிசர்வ் வீரராக இந்திய அணி அறிவித்திருந்தது அனைவரையும் ஆச்சரியத்திற்குள்ளாகியுள்ளது.
இந்த நிலையில் உலக கோப்பைத் தொடருக்கான இந்திய அணியில் தீபக்சஹருக்கு வாய்ப்பு கிடைக்காததற்கு இந்த மூன்று விஷயம் தான் காரணம் என்று கிரிக்கெட் வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர்.
நீண்ட நாட்கள் சர்வதேச போட்டியில் விளையாடாதது..
நடப்பு ஆண்டில் தீபக்சஹர் வெறும் நாலே நாலு டி20 போட்டிகளில் மட்டுமே பங்கேற்று விளையாடியுள்ளார்.
காயம் காரணமாக நீண்ட ஓய்வில் இருந்து மீண்டு வந்த தீபக்சஹர் ஜிம்பாவே அணிக்கு எதிரான தொடரில்தான் விளையாட துவங்கினார். இவருடைய காயம் எந்த அளவிற்கு சரியாகியுள்ளது என்பது இன்னும் தெரியவில்லை என்பதால் உலகக் கோப்பை தொடர்கான இந்திய அணியில் இவருக்கு இடம் கிடைக்கவில்லை என்று கிரிக்கெட் வல்லுனர்கள் தெரிவித்துள்ளனர்.