உலகக் கோப்பை தொடருக்கான இந்திய அணியில் ஸ்ரேயாஸ் ஐயர் இடம்பெறாமல் போனதற்கான மூன்று காரணங்கள்.
டி20 போட்டியில் ரெகுலர் வீரராக கருதப்பட்ட ஷ்ரேயாஸ் ஐயர் செய்ய கடந்த சில ஆண்டுகளில் இந்திய அணிக்காக பெரிதாக விளையாடவில்லை.
இதுவரை 46 டி20 களின் பங்கேற்று விளையாடிய ஷ்ரேயாஸ் ஐயர் 1029 ரன்கள் அடித்துள்ளார், அதில் 7 அரை சதங்கள் அடங்கும். இப்படி டி20 போட்டிகளில் நல்ல ரெகார்ட் வைத்திருந்தும் ஷ்ரேயாஸ் ஐயரை உலகக்கோப்பை தொடருக்கான இந்திய அணியில் இருந்து புறக்கணிக்கப்பட்டுள்ளது ஏற்றுக்கொள்ள முடியாதது என்று முன்னாள் வீரர்கள் பலர் விமர்சித்தனர்.
ஆனால் ஷ்ரேயாஸ் ஐயருக்கு உலகக்கோப்பை தொடருக்கான இந்திய அணியில் இடம் கிடைக்காமல் போனதற்கு இந்த மூன்று காரணங்களை கிரிக்கெட் வல்லுனர்கள் தெரிவித்துள்ளனர்.
மிடில் ஆர்டர் பேட்டிங்.
ஷ்ரேயாஸ் ஐயர் மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன் என்பதால் இந்திய அணியில் விளையாடும் வாய்ப்பு கிடைக்கவில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஏற்கனவே இந்திய அணியில் சூரியகுமார் யாதவ், ரிஷப் பண்ட் ஹர்திக் பாண்டியா போன்ற வீரர்கள் மிடில் ஆர்டரில் சிறப்பாக பேட்டிங் செய்வதாலும் சமீபகாலமாக தீபக் ஹூடா சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்துவதாலும் இவருக்கான இடம் பறிபோய்விட்டது, என்று கிரிக்கெட் வல்லுநர்கள் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது .