மீண்டும் ஐபிஎல் தொடர் நடைபெற்றால் இந்த மூன்று நாடுகளின் தான் நடைபெறும்!

மீண்டும் ஐபிஎல் தொடர் நடைபெற்றால் இந்த மூன்று நாடுகளின் தான் நடைபெறும்

ஐபிஎல் தொடர் தற்போதைக்கு கொரோனா காரணமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. ஐபிஎல் தொடரில் விளையாடும் வீரர்களின் பாதுகாப்பு கருதி ஐபிஎல் தொடர் தற்போதைக்கு மட்டும் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது இருந்தாலும் இந்த ஆண்டு இறுதிக்குள் மீதி ஐபிஎல் போட்டிகள் நடைபெறும் என்று பிசிசிஐ முன்னரே நம்பிக்கை தெரிவித்திருக்கிறது.

அதன்படி தற்பொழுது ஐபிஎல் தொடர் மறுபடியும் நடைபெறுவது குறித்து பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது. ஐபிஎல் தொடரை மூன்று நாடுகளில் ஏதோ ஒரு நாளைத் தேர்ந்தெடுத்து நடத்துவது குறித்து பேசி செய்ய முடிவெடுத்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இலங்கை, இங்கிலாந்து மற்றும் ஐக்கிய அரபு அமீரகம்

இலங்கை கிரிக்கெட் கமிட்டி தானாகவே முன்வந்து ஐபிஎல் தொடரை நாங்கள் பாதுகாப்பாக நடத்தி கொடுக்கிறோம் என்று கூறியிருக்கிறது. ஆனால் இலங்கையில் அடுத்த மாதம் முதல் கொரோனா எண்ணிக்கை அதிகமாக வாய்ப்பு உள்ளது என்று மருத்துவ குழு கூறியிருப்பதை அடுத்து ஐபிஎல் தொடர் அங்கே நடத்தப்படலாம் அல்லது வேண்டாமா என்று பிசிசிஐ முடிவெடுக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இலங்கையை தொடர்ந்து இங்கிலாந்து நாட்டில் ஐபிஎல் தொடர் நடைபெற அதிக வாய்ப்பு உள்ளது. ஏனென்றால் தற்போது இங்கிலாந்தில் கொரோனா கட்டுக்குள் வந்துவிட்டது. பலி எண்ணிக்கைகளும் அங்கே தற்பொழுது இல்லை என்பது குறிப்பிடத்தக்கது. இங்கிலாந்து கிரிக்கெட் வீரர் கெவின் பீட்டர்சன் முன்புகூட இங்கிலாந்து நாட்டில் வைத்து ஐபிஎல் தொடர் நடத்தினால் மிக சிறப்பாக இருக்கும் என்று தனது கருத்தினை கூறி இருந்தார். எனவே ஐபிஎல் தொடர் மீண்டும் நடத்தப்பட்டால் இங்கிலாந்தில் நடைபெற வாய்ப்பு உள்ளது.

கடைசியாக ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெறவும் அதிக வாய்ப்பு உள்ளது. ஏனென்றால் சென்ற ஆண்டு கூட ஐபிஎல் தொடர் மிக பாதுகாப்பாக ஐக்கிய அரபு அமீரகத்தில் வைத்து நடத்தி முடிக்கப்பட்டது. தற்பொழுது அங்கேயும் கொரோனா எண்ணிக்கை கட்டுக்குள் இருப்பதால் ஐபிஎல் தொடரை அங்கே வைத்து நடத்துவது குறித்தும் பிசிசிஐ ஆலோசனை மேற்கொண்டு வருகிறது.

உலக கோப்பை டி20 தொடரும் ஐபிஎல் தொடரும் ஒரே நாட்டில் நடைபெறும்

இந்தியாவில் தற்போது கொரோனா எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகமாகிக் கொண்டே போகிறது. தற்பொழுது உள்ள சூழ்நிலையை பார்த்தால் இந்த ஆண்டு இறுதியில் அக்டோபர் மற்றும் நவம்பர் மாதங்களில் நடைபெற இருந்த ஆண்களுக்கான உலக கோப்பை டி20 தொடர் இந்தியாவில் நடைபெற வாய்ப்பு உள்ளதா என தெரியவில்லை.

ஒருவேளை அப்பொழுதும் சூழ்நிலை இதே போல் இருந்தால் நிச்சயமாக இந்தியாவில் உலக கோப்பை டி20 தொடர் நடைபெறாது. எனவே பிசிசிஐயின் உள் வட்டாரத் தகவல் படி உலக கோப்பை டி20 தொடர் மற்றும் எஞ்சியுள்ள ஐபிஎல் போட்டிகளை ஒரே நாட்டில் வைத்து நடத்தி முடிக்க பிசிசிஐ திட்டமிட்டுள்ளது என தெரியவந்துள்ளது. நிச்சயமாக அது இங்கிலாந்து அல்லது ஐக்கிய அரபு அமீரகத்தில் வைத்து நடத்தப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Prabhu Soundar:

This website uses cookies.