ஐபிஎல் 2021; ஹர்பஜன் சிங்கை எடுக்க வாய்ப்புள்ள மூன்று அணிகள் !!

சமீபமாக சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் இருந்து விடப்பட்ட ஹர்பஜன் சிங் ஐபிஎல் போட்டிகளில் 160 போட்டிகளில் பங்கேற்று 150 விக்கெட்களை வீழ்த்தியுள்ளார். இவருடைய அவரேஜ் 26.4 ஆகும். அனுபவம் வாய்ந்த சுழற்பந்து வீச்சாளரான ஹர்பஜன் சிங்கை மூன்று அணிகளில் ஏதேனும் ஒரு அணி தனக்காக எடுத்துக் கொள்ளும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


1 கிங்ஸ் லெவன் பஞ்சாப்
பஞ்சாப் பஞ்சாப் அணியில் ஒரு ஆஃப் ஸ்பின்னர் கூட இல்லை. அந்த அணியில் ஸ்பின்னர்களாக முருகன் அஸ்வின், ரவி பிஷ்னாய் மற்றும் அனுபவமில்லாத ஹர்ப்ரீட் ஆகிய மூன்று வீரர்கள் மட்டுமே சுழற்பந்துவீச்சாளர்களாக இருக்கின்றனர். அதில் குறிப்பாக அஸ்வின் மற்றும் விஷ்ணு விரிஸ்ட் ஸ்பின்னர்கள் ஆவர்.


2019 ஹர்பஜன் சிங் ஐபிஎல் போட்டி 16 விக்கெட்டுகளை எடுத்து அசத்தினார். இவரின் அனுபவம் மற்றும் துல்லியமான பந்துவீச்சு கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிக்கு நிச்சயம் தேவைப்படும். எனவே இவர் அந்த அணிக்கு தேர்வு செய்யப்படுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

2 ராஜஸ்தான் ராயல்ஸ்

ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் 2 ஸ்பின்னர்கள் மட்டுமே உள்ளனர். சுரேஷ் கோபால் மற்றும் மாயக் மார்க்கண்டே. ஆனால் இவர்கள் இருவரும் லெக் ஸ்பின்னர்கள். கடந்த ஆண்டு துபாயில் நடைபெற்ற போட்டியில் கோபால் மிகவும் மோசமாக விளையாடினார்.

14 போட்டிகளில் பங்கேற்று வெறும் 10 விக்கெட்டுகள் மட்டுமே எடுத்தார். இவருடைய எக்கனாமிக் ரேட் 8.54 இருந்தது. இதனால் 160 போட்டிகளில் பங்கேற்று அனுபவம் வாய்ந்த ஹர்பஜன்சிங் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்காக தேர்வு செய்யப்படுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

3 மும்பை இந்தியன்ஸ்

மும்பை இந்தியன்ஸ் அணிக்காக இவர் 10 வருடம் விளையாடியுள்ளார். இவர் மும்பை அணிக்காக விளையாடி இதுவரை 127 விக்கெட்களை வீழ்த்தியுள்ளார். மும்பை இந்தியன்ஸ் அணியில் க்ருனால் பாண்டியா, ராகுல் சாகர் மற்றும் ஜெயந்த் யாதவ் ஆகியோர் 3 ஸ்பின்னர்கள் உள்ளனர், ஆனால் இதில் ஜெயந்த் யாதவ் மட்டுமே ஆப் ஸ்பின்னர் ஆவார்.

அனுபவம் வாய்ந்த வீரரான ஹர்பஜன் சிங் மீண்டும் மும்பை இந்தியன்ஸ் அணிக்கு திரும்புவார் என பல கிரிக்கெட் வல்லுனர்களும் தெரிவித்துள்ளனர். இந்நிலையில் இவர் மீண்டும் மும்பை இந்தியன்ஸ் அணிக்காக விளையாடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Prabhu Soundar:

This website uses cookies.