மரண மாஸ் காட்டிய ஷாருக் கானுக்காக காத்திருக்கும் மூன்று அணிகள் !!

2021 கான ஐபிஎல் போட்டி மே மாதம் கோலாகலமாக நடைபெற உள்ளது. இந்நிலையில் அனைத்து அணிகளும் தனது வீரர்களை தயார்படுத்திக் கொண்டிருக்கிறது, மேலும் தனக்கு தேவையான வீரர்களை ஏலத்தின் மூலம் பெற்றுக் கொள்ள திட்டம் தீட்டிக் கொண்டு உள்ளது. இந்நிலையில் வருகிற பிப்ரவரி 18 சென்னையில் நடக்க உள்ளது.

சமிபமாக நடந்து முடிந்த சையது முஷ்தாக் அலி போட்டியில் அதிரடியாக விளையாடிய தமிழக அணியை சேர்ந்த ஷாருக்கான் கால் இறுதிப்போட்டியில் 19 பந்துகளுக்கு 40 ரன்கள் அடித்து அசத்தினார். இதன் மூலம அனைவருடைய பார்வையும் தனது பக்கம் திருப்பினார், இவர் லிமிடெட் ஒரு போட்டிகளில் மிக சிறப்பாக செயல்படுகிறார் என்று கிரிக்கெட் வல்லுநர்கள் பலரும் தெரிவித்தனர்.
இந்நிலையில் இவரை மூன்று அணிகள் டார்கெட் செய்துள்ளது.


சென்னை சூப்பர் கிங்ஸ்.
கடந்த ஆண்டு நடைபெற்ற ஐபிஎல் போட்டிகளில் சென்னை அணி எதிர்பாராத விதமாக மிக மோசமான செயல்பாட்டின் மூலம் பிளே ஆப் சுற்றுக்கு கூட தகுதி பெறாமல் வெளியேறியது.


தோனி தலைமையிலான சென்னை அணியில் ஷேன் வாட்சன் தனது ஓய்வை அறிவித்த நிலையில் அந்த அணிக்கு மற்றுமொரு பேட்ஸ்மேன் தேவைப்படுகிறது, வாட்சன் இடத்தை ருத்ராஜ் நிரப்பினாலும் அந்த அணிக்கு மற்றொரு மாற்று வீரர் தேவைப்படுகிறது, இந்நிலையில் ஷாருக்கான் அந்த அணிக்காக தேர்வு செய்யப்படுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர்.

விராட் கோலி தலைமையிலான பெங்களூர் அணியிலிருந்து சமீபமாக அந்த அணியின் நட்சத்திர வீரர்களாக செயல்பட்ட ஆரோன் பின்ச் மற்றும் மொயின் அலி நீக்கப்பட்டனர்.

அந்த அணியின் பேட்ஸ்மேன்களாக விராட் கோலி, ஏபி டிவில்லியர்ஸ் மற்றும் தேவ்தாத் படிக்கல் போன்ற அதிரடி வீரர்கள் இருந்தாலும், அந்த அணிக்கு மற்றுமொரு பேட்ஸ்மேன் தேவைப்படுகிறது இந்நிலையில் முஷ்தாக் அலி போட்டியில் மிக சிறப்பாக செயல்பட்ட ஷாருக்கான் பெங்களூரு அணிக்கு ஒரு நல்ல தீர்வாக அமையலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


ராஜஸ்தான் ராயல்ஸ்.


ராஜஸ்தான் அணியின் நட்சத்திர வீரராக செயல்பட்ட ஸ்டீவ் ஸ்மித் அந்த அணியில் இருந்து நீக்கப்பட்டார், இதன் காரணமாக இந்திய அணியை சேர்ந்த இளம் வீரரான சஞ்சு சாம்சன் அணியின் கேப்டனாக நியமிக்கப்பட்டார்.

இந்நிலையில் பேட்டிங் லைன்-அப் இல் அந்த அணி மிகப்பெரும் சறுக்கலில் உள்ளது. இந்நிலையில் ஷாருக்கான் அந்த அணி பேட்ஸ்மேனாக தேர்வு செய்யப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது

Mohamed:

This website uses cookies.