சென்னை சூப்பர் கிங்ஸ் மட்டும் இல்ல… இந்த இரண்டு டீமும் பென் ஸ்டோக்ஸை விட்டுகொடுக்க வாய்ப்பே இல்ல
இங்கிலாந்து அணியின் நட்சத்திர வீரர் பென் ஸ்டோக்ஸை தனது அணியில் இணைக்க திட்டம் தீட்டியிருக்கும் மூன்று அணிகள் குறித்து இங்கு காண்போம்.
2023 ஐபிஎல் தொடருக்கான மினி ஏலம் இன்னும் சில இடங்களில் நடைபெற இருப்பதால் ஒவ்வொரு அணியும் தனது அணியில் எந்த வீரர்களை தேர்ந்தெடுக்க வேண்டும் என யுத்திகளையும் திட்டங்களையும் தீட்டி வருகிறது.
அந்த வகையில், 2023 ஐபிஎல் தொடரில் தனது பெயரை பதிவு செய்துள்ள இங்கிலாந்து அணியின் டெஸ்ட் கேப்டன் பென் ஸ்டோக்ஸை எப்படியாவது தட்டி தூக்க வேண்டும் என மூன்று அணிகள் திட்டமிடுவதாக தகவல் வெளியாகி உள்ளது.
அப்படிப்பட்ட மூன்று அணிகள் குறித்து இங்கு காண்போம்.
சன்ரைசர்ஸ் ஹைதராபாத்.
2016 ஆம் ஆண்டு டைட்டில் பட்டத்தை வென்ற ஹைதராபாத் அணி அதற்கு பிறகு எந்த ஒரு தொடரிலும் சிறப்பாக செயல்படவில்லை. அணியில் பல மாற்றங்களை ஏற்படுத்தியும் எந்த ஒரு முன்னேற்றமும் இல்லாததால். 2023 ஐபிஎல் தொடரில் தனது அணியின் கேப்டன் கேன் வில்லியம்சன் உட்பட சில வீரர்களை எந்த ஒரு சலனமுமின்றி நீக்கியுள்ளது.
இந்த நிலையில் ஹைதராபாத் அணிக்கு ஒரு கேப்டன் மற்றும் ஆல்ரவுண்டர் தேவை என்பதால், இந்த ரெண்டு திறமைகளையும் உடைய பென் ஸ்டோக்ஸை எப்படியாவது தனது அணியில் இணைக்க வேண்டும் என கடுமையாக போராடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.