எதிர்காலத்தில் இந்திய அணிக்கு கேப்டனாக வாய்ப்பிருக்கும் 3 இளம் வீரர்கள்!!

Prev1 of 3
Use your ← → (arrow) keys to browse

எதிர்காலத்தில் இந்திய அணிக்கு கேப்டனாக வாய்ப்பிருக்கும் 3 இளம் வீரர்கள்!!

இந்திய அணியில் தற்போது ஏராளமான திறமையான இளம் வீரர்கள் கிடைத்துள்ளனர். ஐபிஎல் மற்றும் உள்ளூர் போட்டிகளிம் வளர்ச்சி தான் இவற்றிக்கு காரணம் எனலாம்.

நம்மிடம் இருக்கும் வீரர்களை வைத்து இன்னொரு சர்வதேச தர வாய்ந்த அணியை கபோட உருவாக்கி விடலாம், அப்படி அத்தனை திறமை வாய்ந்த வீரர்கள் நம்மிடம் உள்ளனர்.

தற்போது இந்திய அணிக்கு விராட் கோலி கேப்டனாக உள்ளார். அவருக்கு பிறகு ஒரு 10 வருட கேப்டன்ஷிப் செய்ய நமக்கு வீரர்கள் தேவை. பார்ட் டைமில் ரோகித், ரகானே அஸ்வின் போன்ற வீரர்கள் இருந்தாலும் முழு நேர கேப்டன்ஷிப் செய்ய ஒரு இளம் வீரர் தேவை.

அப்படிப்பட்ட தகுதி உடைய 3 இளம் வீரர்கள் பட்டியல் இங்கே உள்ளது.

3.ஷ்ரேயாஸ் ஐயர் – 23 வயது

மிக இளம் வயதில் இருந்தே திறமை வாய்ந்த வீரராக வலம் வருபவர் ஷ்ரேயாஸ். 2013ஆம் ஆண்டு இங்கிலாந்து சென்ற இளம் வீரர்களில் இவரும் ஒருவர். அப்போது கென்ட் அணிக்காக ஆடிய ஒரே ஆட்டத்தில் 171 ரண குவித்து இங்கிலாந்து அணிக்காக சாதனை புரிந்தார்

அதன் பின்னர் 2014 அண்டர்-19 உலகக்கோப்பை தொடரை அசத்தலாக ஆடினார். அதன் காரணமாக ஐபிஎல் தொடரில் டெல்லி டெர் டெவில்ஸ் அணிக்காக ஆட தேர்வானார்.

2.6 கோடிக்கு தேர்வான இவர் முதல் இரண்டு சீசன்களில் 400+ ரன் குவித்தார். தற்போது டெல்லி அணியின் கேப்டனாகவும் நியமிக்கப்பட்டுள்ளார்.

மேலும், 22 வயதில் இந்திய ஏ, மற்றும் இந்திய பி அணிகளை வெற்றிகரமாக வழிநடத்தி உள்ளார். தற்போது டெல்லி அணியையும் நன்றாக வழிநடத்தி வருகிறார்.

இவர் இன்னும் சில வருடத்தில் இந்திய அணிக்கு கேப்டனாக வர வாய்ப்புகள் அதிகம்.

Prev1 of 3
Use your ← → (arrow) keys to browse

Editor:

This website uses cookies.