இடம் மாற்றப்படும் 3-வது டெஸ்ட் ! புதிய திட்டத்தை போடும் ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம் !

இடம் மாற்றப்படும் 3-வது டெஸ்ட் ! புதிய திட்டத்தை போடும் ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம் !

ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணம் செய்துள்ள இந்திய அணி நான்கு டெஸ்ட், 3 ஒருநாள் மற்றும் 3 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது. இதில் ஒருநாள் தொடரில் ஆஸ்திரேலிய அணியும் டி20 தொடரில் இந்திய அணியும் வெற்றி பெற்றிருக்கின்றன.

ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டி கடந்த வாரம் நடைபெற்றது. இந்த டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலிய அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் அபாரமாக வெற்றி பெற்றது. முதல் ஆட்டத்தில் 53 ரன்கள் முன்னிலை பெற்று இருந்தாலும் 2-வது ஆட்டத்தில் வெறும் 36 ரன்கள் மட்டுமே எடுத்து ஆஸ்திரேலியாவிற்கு வெற்றியை தாரை வார்த்தது இந்திய அணி. 2-வது டெஸ்ட் வரும் வெள்ளிக்கிழமையன்று மெல்பேர்ன் மைதானத்தில் தொடங்கப் போகிறது.

3வது டெஸ்ட் போட்டி சிட்னி மைதானத்தில், நான்காவது டெஸ்ட் போட்டி பிரிஸ்பேன் மைதானத்திலும் நடைபெறப்போகிறது. இந்நிலையில் 3வது டெஸ்ட் போட்டி நடைபெறத் திட்டமிடப்பட்டுள்ள சிட்னி மைதானத்தில் நியூ சவுத் வேல்ஸ் மாநிலத்தில் கொரானா வைரஸ் பாதிப்பு அதிகமாக இருக்கிறது. இதன் காரணமாக 3வது டெஸ்ட் போட்டி சிட்னி மைதானத்தில் நடைபெறுவது சந்தேகமாக இருக்கிறது.

இதனை தொடர்ந்து மூன்றாவது டெஸ்ட் போட்டியை மெல்பேர்ன் மைதானத்திலேயே நடத்திவிட ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம் முயற்சி செய்து வருகிறது. இதுபற்றிய ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது “மூன்றாவது டெஸ்ட் போட்டியை மெல்பேர்ன் மைதானத்தில் நடத்தவே ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம் அனைத்து முயற்சிகளையும் மேற்கொண்டு வருகிறது.

அதே போல் 4வது டெஸ்ட் போட்டி பிரிஸ்பேன் மைதானத்தில் நடத்தப்பட இருக்கிறது. ஆனால் நியூ சவுத் வேல்ஸ் மாநிலத்தில் நிலைமை மோசமாக மாறி விட்டால் மூன்றாவது போட்டியை மெல்பேர்ன் மைதானத்திலும் நான்காவது பிரிஸ்பேன் மைதானத்தில் நடத்துவதற்கான ஏற்பாடுகளை ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம் மேற்கொள்ளும். இன்னும் சில நாட்களில் இந்த மூன்றாவது போட்டி எங்கு நடைபெறும் என்பதை அறிவித்து விடுவோம்” என்று அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டிருக்கிறது.

Prabhu Soundar:

This website uses cookies.