முதல் ஆறு ஆட்டங்களில் தோல்வி. முதல் 8 ஆட்டங்களில் 7-ல் தோல்வி… என நாளுக்கு நாள் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியின் நிலைமை மோசமாகிக்கொண்டிருந்த நிலையில், திடீரென நிலைமை தலைகீழாக மாறியது. கடைசி 5 ஆட்டங்களில் 4-ல் வெற்றி கண்டுள்ளது ஆர்சிபி அணி.
7 வெற்றிகள், 14 புள்ளிகளுடன் ஆர்சிபி அணி பிளேஆஃப்-புக்குச் செல்லமுடியுமா? அதற்கான சாத்தியக்கூறுகள் உண்டா? பார்க்கலாம்.
முதல் சாத்தியக்கூறு
| போட்டி | வெற்றி |
| ராஜஸ்தான் – சன்ரைசர்ஸ் | ராஜஸ்தான் |
| தில்லி – பெங்களூர் | பெங்களூர் |
| கொல்கத்தா – மும்பை | மும்பை |
| சன்ரைசர்ஸ் – பஞ்சாப் | சன்ரைசர்ஸ் |
| பெங்களூர் – ராஜஸ்தான் | பெங்களூர் |
| சென்னை – தில்லி | சென்னை (அ) தில்லி |
| மும்பை – சன்ரைசர்ஸ் | மும்பை |
| பஞ்சாப் – கொல்கத்தா | பஞ்சாப் (அ) கொல்கத்தா |
| தில்லி – ராஜஸ்தான் | தில்லி |
| பெங்களூர் – சன்ரைசர்ஸ் | பெங்களூர் |
| சென்னை – பஞ்சாப் | சென்னை |
| மும்பை – கொல்கத்தா | மும்பை (அ) கொல்கத்தா |
சென்னை – 18, மும்பை – 20, தில்லி – 18, பெங்களூர் – 14, சன்ரைசர்ஸ் – 12, பஞ்சாப் – 10, கொல்கத்தா – 10, ராஜஸ்தான் – 10.
இந்தச் சாத்தியக் கூறுகள் மூலம் 14 புள்ளிகள் மூலம் நெட் ரன்ரேட் சிக்கல் இல்லாமல் நேராக பிளேஆஃப்-புக்குத் தகுதி பெறமுடியும் ஆர்சிபி அணியால். பச்சை வண்ணம் அடித்த ஆட்டங்களில் இரண்டு அணிகளில் எந்த அணி ஜெயித்தாலும் அதனால் பெங்களூர் பிளேஆஃப்-புக்குச் செல்வது பாதிக்காது. அந்த மூன்று ஆட்டங்களிலும் தில்லி, கொல்கத்தா, மும்பை ஜெயிப்பதாக வைத்துக்கொண்டால் மேலே சொன்னபடி புள்ளிகள் கிடைக்கும்.
2-வது சாத்தியக்கூறு
| போட்டி | வெற்றி |
| ராஜஸ்தான் – சன்ரைசர்ஸ் | சன்ரைசர்ஸ் |
| தில்லி – பெங்களூர் | பெங்களூர் |
| கொல்கத்தா – மும்பை | மும்பை |
| சன்ரைசர்ஸ் – பஞ்சாப் | பஞ்சாப் |
| பெங்களூர் – ராஜஸ்தான் | பெங்களூர் |
| சென்னை – தில்லி | சென்னை |
| மும்பை – சன்ரைசர்ஸ் | மும்பை |
| பஞ்சாப் – கொல்கத்தா | கொல்கத்தா |
| தில்லி – ராஜஸ்தான் | ராஜஸ்தான் |
| பெங்களூர் – சன்ரைசர்ஸ் | பெங்களூர் |
| சென்னை – பஞ்சாப் | சென்னை |
| மும்பை – கொல்கத்தா | மும்பை |
சென்னை – 20, மும்பை – 20, தில்லி – 14, பெங்களூர் – 14, சன்ரைசர்ஸ் – 12, பஞ்சாப் – 12, கொல்கத்தா – 10, ராஜஸ்தான் – 10.
3-வது சாத்தியக்கூறு
| போட்டி | வெற்றி |
| ராஜஸ்தான் – சன்ரைசர்ஸ் | ராஜஸ்தான் (அ) சன்ரைசர்ஸ் |
| தில்லி – பெங்களூர் | பெங்களூர் |
| கொல்கத்தா – மும்பை | மும்பை |
| சன்ரைசர்ஸ் – பஞ்சாப் | பஞ்சாப் |
| பெங்களூர் – ராஜஸ்தான் | பெங்களூர் |
| சென்னை – தில்லி | சென்னை (அ) தில்லி |
| மும்பை – சன்ரைசர்ஸ் | மும்பை |
| பஞ்சாப் – கொல்கத்தா | கொல்கத்தா |
| தில்லி – ராஜஸ்தான் | ராஜஸ்தான் |
| பெங்களூர் – சன்ரைசர்ஸ் | பெங்களூர் |
| சென்னை – பஞ்சாப் | சென்னை |
| மும்பை – கொல்கத்தா | மும்பை (அ) கொல்கத்தா |
சென்னை – 20, மும்பை – 20, பெங்களூர் – 14, தில்லி – 14 , பஞ்சாப் – 12, ராஜஸ்தான் – 12, கொல்கத்தா – 10.
பச்சை வண்ணத்தில் குறிப்பிட்டுள்ள மூன்று ஆட்டங்களில் ராஜஸ்தான், சென்னை, மும்பை ஜெயிப்பதாக வைத்துக்கொண்டால் புள்ளிகள் பட்டியலில் அணிகளின் வரிசை இவ்வாறு அமையும்.
இந்த மூன்று சாத்தியக்கூறுகளின்படி அடுத்துவருகிற 12 ஆட்டங்களும் நடைபெற்றால் ஆர்சிபி அணியால் சுலபமாக நெட் ரன்ரேட் சிக்கல் எதுவுமில்லாமல் புள்ளிகளின் அடிப்படையில் ஜம்மென்று பிளேஆஃப்-புக்குத் தகுதி பெறமுடியும். ஆனால் அதற்கு அந்த அணியும் ஒத்துழைக்கவேண்டும். மீதமுள்ள 3 ஆட்டங்களையுமே வெல்லவேண்டும். அப்படி மட்டும் நடந்தால் ஆர்சிபி ரசிகர்கள் உரக்க விசிலடித்து மகிழலாம்.