இந்தியா அதனுடைய முதல் டெஸ்ட் போட்டியை 1932 ஆம் ஆண்டு விளையாடியது. அன்று முதல் பல்வேறு ஜாம்பவான் டெஸ்ட் கிரிக்கெட் வீரர்கள் இந்திய அணியை தூக்கி பிடித்தார்கள். சுனில் கவாஸ்கர், சச்சின் டெண்டுல்கர், ராகுல் டிராவிட், தற்பொழுது விராட் கோலி என நம்பிக்கையான பேட்ஸ்மேன்கள் ஒரு பக்கம் விளையாடி வருகிறார்கள். அதேபோல கபில்தேவ், அனில் கும்ப்ளே, ஹர்பஜன் சிங் தற்பொழுது ரவிச்சந்திரன் அஸ்வின் என நம்பிக்கையான பந்துவீச்சாளர்கள் ஒரு பக்கம் விளையாடி வருகிறார்கள்.
இந்திய அணி கடந்த 5 ஆண்டுகளில் மிக சிறப்பாக விளையாடி டெஸ்ட் தரவரிசை பட்டியலில் முதல் இரண்டு இடங்களுக்குள் மட்டுமே மாறி மாறி நீடித்து வருகிறது. குறிப்பாக, கடந்த 2 ஆண்டுகளில் நடந்த உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரில் மிகச் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி இறுதிப்போட்டி வரை முன்னேறி தற்பொழுது நியூசிலாந்து அணியுடன் இறுதிப் போட்டியில் மிக அற்புதமாக விளையாடிக் கொண்டிருக்கிறது.
மிக சிறப்பான டெஸ்ட் அணியாக வலம் வந்து கொண்டிருக்கும் இந்திய அணியிடம் நான்கு வீரர்கள் மிக சிறப்பாக விளையாடி இருக்கிறார்கள். குறிப்பாக ஒரு நாலு வீரர்கள் இந்திய அணிக்கு எதிராக அதிக சதங்களை குவித்து இருக்கிறார்கள். அவர்கள் யார் என்று தற்போது பார்ப்போம்.
ஸ்டீவ் ஸ்மித் – 8 சதங்கள்
ஆஸ்திரேலிய அணியில் மட்டுமல்லாமல் உலக அளவில் மிக அற்புதமாக டெஸ்ட் போட்டிகளில் விளையாடி வரும் ஒரு சிறந்த வீரர். இந்தியாவுக்கு எதிராக 14 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி இருக்கிறார்.அந்த 14 டெஸ்ட் போட்டிகளில் ஸ்டீவ் ஸ்மித் 8 சதங்கள் இதுவரை குவித்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் 14 டெஸ்ட் போட்டிகளில் இந்தியாவுக்கு எதிராக விளையாடி மொத்தமாக 1742 ரன்கள் குவித்திருக்கிறார். இந்தியாவுக்கு எதிராக டெஸ்ட் போட்டிகளில் இவரது பேட்டிங் அவரேஜ் 72.58 ஆகும்.
அதேசமயம் 5 அரை சதங்களும் இந்தியாவுக்கு எதிராக இவர் குவித்திருக்கிறார். இந்தியாவுக்கு எதிராக ஒரு இன்னிங்சில் இவர் எடுத்த அதிகபட்ச ஸ்கோர் 192 ஆகும். ஸ்டீவ் ஸ்மித் தனது மொத்த டெஸ்ட் கேரியரில் 139 இன்னிங்ஸ்களில் விளையாடி 7540 ரன்கள் குவித்திருக்கிறார். இவரது டெஸ்ட் பேட்டிங் ஆவரேஜ் 61.80 ஆகும். மொத்தமாக டெஸ்ட் போட்டிகளில் 27 சதங்களும், 31 அரை சதங்களும் இதுவரை இவர் குவித்திருக்கிறார்.