ஒவ்வொரு இந்திய கிரிக்கெட் வீரருக்கும் டெஸ்ட் போட்டியில் இந்திய அணியில் விளையாட வேண்டும் என்பது கனவாக இருக்கும். உள்ளூர் போட்டிகளில் மிக சிறப்பாக விளையாடி தங்களுடைய திறமையை நிரூபித்து, அதன் பின்னர் டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் விளையாடும் வாய்ப்பை பெறுவார்கள்.
ஒரு சில வீரர்கள் ஆரம்பம் முதலே மிக சிறப்பாக விளையாடி தங்களுடைய டெஸ்ட் கிரிக்கெட் கேரியரை நீண்ட நாட்களுக்கு தக்க வைத்துக் கொள்வார்கள். ஆனால் ஒரு சிலர் சற்று சுமாராக விளையாடி அடுத்தடுத்த வாய்ப்புகள் கிடைக்கப் பெறாமல் காணாமலும் போயிருக்கிறார்கள்.
அப்படிப்பட்ட இந்த டெஸ்ட் கிரிக்கெட்டில் முதல் டெஸ்ட் போட்டியில் விளையாடும் எந்த ஒரு வீரரும் சற்று நிதானமாக விளையாட வேண்டும் என்று நினைப்பார்கள். அதன் காரணமாகவே முதல் டெஸ்ட் போட்டியில் சற்று பதட்டமும் அதிகமாக இருக்கும். இருப்பினும் தங்களுடைய முதல் டெஸ்ட் போட்டியில் ஒரு சிலர் அதிக ரன்கள் குவித்த இருக்கிறார்கள். அப்படி அதிக ரன்களை குவித்த இந்திய கிரிக்கெட் வீரர்கள் யார் யார் என்று தற்போது பார்ப்போம்.
லாலா அமர்நாத் – 156 ரன்கள்
1933 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் இங்கிலாந்து எனக்கு எதிராக தன்னுடைய முதல் டெஸ்ட் போட்டியில் லாலா அமர்நாத் விளையாடினார். அந்த போட்டியில் முதல் இன்னிங்ஸில் லாலா அமர்நாத் 38 ரன்கள் மட்டுமே குவித்தார், ஆனால் 2-வது இன்னிங்சில் அபாரமாக விளையாடி 118 ரன்கள் குவித்தார்.
அந்தப் போட்டியில் முதலில் பேட்டிங் விளையாடிய இந்திய அணி முதல் இன்னிங்ஸ் முடிவில் 219 ரன்கள் குவித்தது. அந்த இன்னிங்ஸில் தான் அமர்நாத் 38 ரன்கள் குவித்தார். அதன் பின்னர் விளையாடிய இங்கிலாந்து அணி முதல் இன்னிங்சில் முடிவில் 438 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தது. இங்கிலாந்து அணியில் பிரியான் வேலன்டைன் அதிகபட்சமாக 136 ரன்கள் குவித்தார்.
அதற்கு அடுத்து விளையாடிய இந்திய அணி 2-வது இன்னிங்ஸ் முடிவில் 258 ரன்கள் மட்டுமே குவித்தது. அந்த இன்னிங்சில் லாலா அமர்நாத் 118 ரன்கள் குவித்தார். இருப்பினும் 40 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற எளிய இலக்குடன் விளையாடிய இங்கிலாந்து அணி, அந்த போட்டியின் முடிவில் 9 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் இந்திய அணியை வீழ்த்தி வெற்றி பெற்றது.
லாலா அமர்நாத் இந்திய அணிக்காக 1933 முதல் 1952 ஆம் ஆண்டு வரை விளையாடி இருக்கிறார். அதில் மொத்தமாக 24 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 878 ரன்கள் குவித்துள்ளார். ஒரு சதம் மற்றும் 4 அரைசதங்கள் குவித்துள்ளார். டெஸ்ட் போட்டிகளில் இவருடைய பேட்டிங் ஆவெரேஜ் 24.38 ஆகும். மேலும் பந்து வீச்சில் 35 இன்னிங்ஸ்களில் 45 விக்கெட்டுகளை லாலா அமர்நாத் கைப்பற்றி இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.