இந்திய அணியை விரைவில் கலக்க வரும் 5 ஆல்ரவுண்டர்கள் !!


ஒரு அணிக்கு ஆல்ரவுண்டர்கள் சிறந்த வீரர்களாக இருப்பது அந்த அணியின் மிகப்பெரிய பலமாக அமையும் அந்த வகையில் இந்திய அணியில் ஹார்திக் பாண்டியா மற்றும் ரவீந்திர ஜடேஜா ஆகிய இருவரும் பந்துவீச்சிலும் பேட்டிகளும் பல சாதனைகளைப் படைத்துள்ளனர்.

இந்நிலையில் இந்திய அணியின் சேர்மனாக சேத்தன் சர்மா இந்திய அணிக்கு இன்னும் சில ஆல்ரவுண்டர் களை அறிமுகப்படுத்த உள்ளார்.

1.ராகுல் டிவாட்டியா.

ஹரியானாவைச் சேர்ந்த ராகுல் டிவாட்டியா ராஜஸ்தான் ராயல்ஸ் 2020 இல் அணிக்காக தேர்வு செய்யப்பட்டார். பஞ்சாபுக்கு எதிரான போட்டியில் பஞ்சாப் அணியை சேர்ந்த வேகப்பந்து வீச்சாளர் செல்டன் கார்டல் வீசிய பந்தை தொடர்ந்து ஐந்து சிஸ்கள் அடித்து ராஜஸ்தான் அணிக்கு அதிரடியான வெற்றியை கொடுத்தார்.

இதன்மூலம் தனது திறமையை வெளிப்படுத்தி அனைவராலும் பாராட்டப்பட்டார்.இடது கை பேட்ஸ்மேனான இவர் 2020 ஐபிஎல் போட்டியில் 255 ரன்களை,10 விக்கெட்களையும் எடுத்தார். மேலும் இவருடைய ஸ்ட்ரைக் ரேட் 139.34 மற்றும் இவருடைய எக்கானமி 7.08 ஆகும்.

இவர் எதிர்கால இந்திய அணியின் மிகச்சிறந்த ஆல்-ரவுண்டராக வலம் வருவார் என்று கிரிக்கெட் வல்லுநர்கள் பலரும் தனது கருத்தை தெரிவித்துள்ளனர்.

2.க்ருனால் பாண்டியா.
மும்பை இந்தியன்ஸ் அணியின் அதிரடி ஆல்ரவுண்டரான க்ருனால் பாண்டியா 2020 ஐபிஎல் போட்டியில் சொல்லிக்கொள்ளும் அளவுக்கு சிறப்பாக செயல்படவில்லை. இதற்கு முந்தைய ஆண்டுகளில் மிகச் சிறப்பாக விளையாடி அனைவராலும் போற்றப்பட்டார்.

இவர் பேட்டிங்கில் அதிரடியாக ஆடி அணியின் போக்கை மாற்றக் கூடியதில் வல்லவர் . மேலும் இக்கட்டான நிலையில் மிகவும் சிறப்பாக பந்து வீசி எதிரணி பேட்ஸ்மேன்களை தினற செய்வதில் திறமை படைத்தவர்.

29 வயதாகும் இவருடைய ஸ்ட்ரைக் ரேட் 142.5. மற்றும் இவருடைய எக்கனாமி ரேட் 7.26 ஆகும். இதுவரை 71 போட்டிகளில் இந்தியாவுக்காக விளையாட அதில் 18 டி20 போட்டிகளும் அடங்கும் இந்நிலையில் இவர் மீண்டும் இந்திய அணிக்காக ஆல் ரவுண்டவராக தேர்வு செய்யப்படுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

3.சிவம் டுபே.
சிவம் டுபே ஒரு மிகச் சிறந்த ஆல்ரவுண்டர் திகழ்ந்து வருகிறார், இவர் பேட்டிங் மற்றும் பவுலிங்கில் மிக சிறப்பாக செயல்படுகிறார். குறிப்பாக பேட்டிங்கில் இவருக்கு நிறைய திறமை உள்ளது. கடந்த வருடம் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிக்காக விளையாடியவர் மிகச் சிறப்பாக செயல்பட்டு அணியின் வெற்றிக்கு பல முறை உதவினார்.

இடது கை பேட்ஸ்மேனான இவரின் ஸ்ட்ரைக் ரேட் 122.46
மேலும் இவருடைய எக்கனாமிக் ரேட்8.11 ஆகும். 25 வயதாகும் டுபே இதுவரை இந்தியாவுக்காக 12 டி20 போட்டிகளில் பங்கேற்றுள்ளார். இவர் மீண்டும் இந்திய அணிக்காக செயல்படுவார் என்று தேர்வாளர்கள் நம்பிக்கை வைத்துள்ளார்கள்.

4.விஜய் சங்கர்.
2019 உலகக்கோப்பை இந்திய அணிக்காக பல சர்ச்சைகளையும் தாண்டி தேர்வு செய்யப்பட்ட விஜய்சங்கர் ஒரு மிகச்சிறந்த ஆல்-ரவுண்டராக திகழ்ந்தார்.தமிழகத்தைச் சேர்ந்த இவர் காயம் காரணமாக இவரால் போட்டிகளில் பங்கு கொள்ள முடியவில்லை.

2020இல் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்காக தேர்வு செய்யப்பட்ட விஜயசங்கர் அணியில் ஒரு முக்கிய வீரராக திகழ்ந்தார். இந்நிலையில் சையது முஷ்டாக் அலி போட்டியில் பங்குபெறும் இவரின் செயல் பாட்டின் மூலம் இவர் இந்திய அணிக்குத் தேர்வு செய்யப்படுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

5.அக்சர் பட்டேல்.
கடைசியாக 2018 இந்திய அணிக்காக இடது கை சுழற்பந்து வீச்சாளராக தேர்வுசெய்யப்பட்ட அக்ஷர் பட்டேல் காயம் காரணமாக இவரால் இந்திய அணி தொடரமுடியவில்லை. சுழற்பந்துவீச்சில் பல சாதனைகளை படைத்துள்ள இவர் இதுவரை இந்திய அணிக்காக 38 ஒருநாள் போட்டிகளிலும் 11 டி20 போட்டிகளில் விளையாடியுள்ளார். இவருடைய எக்கனாமிக் ரேட் 4.43 மற்றும் 6.79 ஆகும்.

இவர் கடந்த வருடம் நடைபெற்ற ஐபிஎல் போட்டியில் 15 போட்டிகளில் பங்கேற்று சொற்பமான ரன்களை மட்டுமே விட்டுக் கொடுத்தார் இவருடைய எக்கனாமிக் 6.41 ஆக இருந்தது.

இவரின் துல்லியமான பந்துவீச்சின் மூலம் எதிரணி பேட்ஸ்மேன்களை திணறச் செய்வதில் வல்லவர். மேலும் பேட்டிங்கில் அதிரடியாக செயல்படும் இவருடைய ஸ்ட்ரைக் ரேட் 137.64 .இவர் இந்திய அணிக்காக மீண்டும் விளையாடுவார் என்று கிரிக்கெட் வட்டாரங்கள் தெரிவித்துள்ளது

Mohamed:

This website uses cookies.