கடந்த சில வருடங்களாக விராட் கோலியின் வளர்ச்சி அபிரிவிதமாக வளர்ந்துள்ளது என்பதை யாராலும் மறுக்க இயலாதது. கிரிக்கெட் போட்டியில் பேட்டிங்கை அடுத்த கட்டத்திற்கு எடுத்து சென்று கொண்டிருக்கிறார். உலகத்தில் உள்ள கிரிக்கெட் வீரர்களில் அனைத்து வகையான போட்டிகளிலும் 50+ சராசரி வைத்துள்ளது விராட் கோலி என்ற பேட்டிங் கிங் மட்டும் தான். டி20 மற்றும் ஓருநாள் போட்டிகளில் அவரை அடித்துக்கொள்ள யாரும் இல்லை என்று தான் கூற வேண்டும்.
ஒருநாள் மற்றும் டி20 போட்டிகளில் எவ்வளவு பெரிய இமாலய இலக்காக இருந்தாலும் அதிரடியாக அடித்து சேஸ் செய்துவிடுவார் கிங் கோலி. ஆனால், டெஸ்ட் போட்டியில் அவரது ஆட்டத் திறன் சற்று மீண்டும் மீண்டும் சில வீரர்களுடன் ஒப்பிடப்பட்டுதான் வருகிறது. மேலும், விராட் கோலியை விடவும் பலர் திறமை வாய்ந்த டெஸ்ட் பேட்ஸ்மேன்களாக மதிப்பிடப்பட்டு வருகின்றனர்.
விராட் கோலி தற்போது வரை 62 டெஸ்ட் போட்டிகளில் ஆடி, 4975 ரன் குவித்துள்ளார். அதன் சராசரி 51.82 ஆகும். மேலும், இதில் 19 சதம் மற்றும் 14 அரை சதம் மற்றும் 5 இரட்டை சதம் ஆகியவை அடங்கும்.
அவ்வாறு மதிப்பிடப்பட்ட 5 பேட்ஸ்மேன்களை தற்போது பார்ப்போம்
1.ஸ்டீவ் ஸ்மித் (ஆஸ்திரேலியா)
இவரது ஆட்டட்தையும், வலிமையான தடுப்பிலும் விராட் கோய்ல்யை விட சிறந்த டெஸ்ட் வீரராகத் தான் காட்சியளிக்கிறார். அதே நேரத்தில் புள்ளிவிவரங்களைப் பார்த்தாலும் கோலியை விட வலிமையான டெஸ்ட் பேட்ஸ்மேனாகத் தான் உள்ளார்.
மொத்தம் 57 டெஸ்ட் போட்டிகளில் ஆடியுள்ள ஸ்மித் 5511 ரன் அடித்துள்ளார். இதன் சராசரி 61.23 ஆகும்.