உலகக்கோப்பை தொடரில் விளையாட காலம் காலமாக காத்திருக்கும் ஐந்து பந்துவீச்சாளர்கள்
ஒவ்வொரு கிரிக்கெட் அணிக்கும் உலக கோப்பையை ஒரு முறையாவது வென்றுவிட வேண்டும் என்ற லட்சியம் இருப்பதை போன்றே ஒவ்வொரு கிரிக்கெட் வீரருக்கும் ஒரு முறையாவது உலகக்கோப்பை கிரிக்கெட் தொடருக்கான தனது நாட்டின் அணியில் இடம்பிடிக்க வேண்டும் என்பதே வாழ்க்கை லட்சியமாக இருக்கும்.
உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் விளையாடுவதை எத்தனை கிரிக்கெட் வீரர்கள் லட்சியமாக கொண்டிருந்தாலும், வாய்ப்பு கிடைப்பது என்னவோ வெறும் 15 வீரர்களுக்கு மட்டும் தான்.
தோனி போன்ற எளிமையான குடும்பத்தை சேர்ந்த பல வீரர்கள் தங்களது திறமையின் மூலம் பல்வேறு சாதனைகள் புரிந்திருந்தாலும், பல வீரர்களுக்கு உலகக்கோப்பைக்கான அணியில் இடம்பிடிப்பதே எட்டாக்கணியாகவே உள்ளது.
அந்த வகையில் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் விளையாட முடியாமல் காலம் காலமாக காத்திருக்கும் ஐந்து இந்திய பந்துவீச்சாளர்கள் பட்டியலை இங்கு பார்ப்போம்.
- ரவிசந்திர அஸ்வின்’;
பலருக்கு இந்த தகவல் ஆச்சரியத்தை ஏற்படுத்தலாம். இந்திய கிரிக்கெட் அணியின் மிக முக்கிய வீரராக அறியப்பட்டு வரும் சுழறப்ந்து வீச்சாளர் அஸ்வின் இதுவரை ஒரு உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் கூட விளையாடவில்லை. சாஹல், குல்தீப் போன்ற இளம் சுழற்பந்து வீச்சாளர்கள் அபாரமாக விளையாடி வருவதால் அடுத்த வருடம் நடைபெற இருக்கும் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரிலும் அஸ்வின் இடம்பிடிப்பது கடினமே.