இந்திய அணிக்காக விளையாட காத்திருக்கும் 50 கி.மீக்கு மேல் வேகமாக வீசும் 5 இளம் பந்துவீச்சாளர்கள்
ஒரு காலத்தில் இந்திய அணியில் வேகப்பந்து வீச்சு இல்லாமல் பற்றாக்குறையாக இருந்தது. ஆனால், தற்போது முகமது சமி, புவனேஸ்வர் குமார், ஜஸ்பிரித் பும்ரா, நவதீப் சைனி என அடுத்தடுத்து சிறந்த வேகப்பந்து வீச்சாளர்கள் இந்திய அணிக்காக ஆடிக்கொண்டிருக்கின்றனர். அதனைத் தாண்டி உள்ளூர் தொடர்களில் நன்றாக வீசும் வேகப்பந்து வீச்சாளர்கள் வளர்ந்து விட்டனர்.
இதன் காரணமாக இந்திய அணி தொடர்ச்சியாக பல வெற்றிகளை பெற்று வருகிறது. ஒரு காலத்தில் ஆசிஸ் நெஹரா, ஜாகிர் கான் போன்ற வீரர்கள் 140 கிலோமீட்டரை பேசினாலே பெரிதாக எண்ணிக் கொண்டிருப்போம். தற்போது உள்ள இங்கே இளம் வேகப்பந்து வீச்சாளர்கள் மிக எளிதாக 150 கிலோ மீட்டர் வேகத்தில் வீசிய கொண்டிருக்கின்றனர். அப்படியாக இந்திய அணிக்காக விரைவில் ஆடப்போகும் பந்துவீச்சாளர்களை தற்போது காண்போம்.
ஆவேஷ் கான்
மிக இளம் வேகப்பந்து வீச்சாளரான இவர் மிக எளிமையாக 145 கிலோ மீட்டருக்கு மேல் வீசக் கூடிய வல்லமை படைத்தவர். 2013ஆம் ஆண்டு தனது 17 வயதில் ரஞ்சி கோப்பை தொடரில் அறிமுகமானவர் இவர். சமீபத்தில் இவருக்கு காயம் ஏற்பட்டது . காயத்திற்கு பின்னர் தற்போது 150 கிலோ மீட்டருக்கு மேல் வேகமாக வீசிக் கொண்டிருக்கிறார். மற்ற வேகப்பந்து வீச்சாளர்களை போல் இவரிடமும் ஒருசில வெரைட்டியான பந்து வீச்சுகள் உள்ளன.
2014 ஆம் ஆண்டு நடைபெற்ற தொடரில் 19 வயதுக்குட்பட்டோருக்கான உலக கோப்பை அணியில் இருந்தார். வெளிநாடுகளில் இந்திய அணியின் பயிற்சியில் பந்துவீசும் பந்துவீச்சாளராக செயல்பட்டிருக்கிறார் வெகு சீக்கிரம் இந்திய அணியில் இடம் பிடிப்பார் இவர்.