கிரிக்கெட் உலகின் திருவிழா என்றால் அது உலக கோப்பை தொடராகத்தான் இருக்க முடியும். 4 ஆண்டுகளுக்கு ஒரு முறை ஐசிசியால் நடத்தப்படும் இந்த தொடர், வரும் 30 ஆம் தேதி துவங்குகிறது. 12-வது உலக கோப்பை கிரிக்கெட் தொடரான இதில், 10 முன்னணி கிரிக்கெட் அணிகள் பங்கேற்கின்றன. கிரிக்கெட் ரசிகர்களுக்கு ஏறத்தாழ 2 மாதங்கள் தீனி போடும் தொடராக இந்த தொடர் இருக்கும் என்பதில் எந்த வித ஐயமும் இல்லை. அதேபோல், பல்வேறு அணிகளைச்சேர்ந்த நட்சத்திர வீரர்கள் பலர் இந்த உலக கோப்பை தொடரோடு, சர்வதேச கிரிக்கெட்டுக்கு, முழுக்கு போடலாம் என தெரிகிறது.
விளையாட்டை பொறுத்தவரை ஓய்வு என்பது தவிர்க்க முடியாதது. நமக்கு பிடித்த கிரிக்கெட் வீரர்களில் பெரும்பாலோர் தங்கள் ஓய்வை அறிவிக்க காத்துக்கொண்டு இருக்கின்றனர். கனத்த இதயத்துடன் அவர்களுக்கு விடைகொடுக்க ரசிகர்களும் தயாராகிவிட்டனர். ஓய்வை அறிக்க இருக்கும் 5 நட்சத்திர வீரர்களை கீழ் காணலாம்.
டோனி
37 வயதான இவர் பல ஆண்டுகளாக இந்திய அணியின் நட்சத்திர வீரராக திகழ்கிறார். இந்தியாவின் வெற்றிகரமான கேப்டன்களில் ஒருவராக வலம் வந்த டோனிக்கு இந்தியா மட்டும் அல்லாது உலகம் முழுவதும் ரசிகர்கள் உள்ளனர். சமீப காலங்களில் இவர் நல்ல பார்மில் உள்ளார்.
இதற்கு அண்மையில், ஐபிஎல் தொடரில், டோனி எதிரணியை கலங்கடித்ததே சான்று. மிகச்சிறந்த பினிஷர்களில் ஒருவர் என்று புகழப்படும் டோனி வயது மூப்பு மற்றும் ரிஷ்ப் பண்ட் போன்ற இளம் வீரர்களின் சிறப்பான செயல்பாடுகள் ஆகியவையால் டோனி தனது ஓய்வை அறிவிப்பார் என பரவலாக கிரிக்கெட் வட்டாரத்தில் பேசும் செய்தியாக இருக்கிறது. எனினும் டோனி தொடர்ந்து விளையாடுவார் என்று அவரது ரசிகர்கள் நம்பிக்கையோடு கூறுகின்றனர்.