பணம் அதிகம் சம்பாதிக்கும் போட்டிகளில் முக்கியமான ஒன்றாக கிரிக்கெட் போட்டி உள்ளது. இதில் தேர்வாகும் கிரிக்கெட் வீரர்கள் தங்களது வருமானத்தின் மூலம் லட்சாதிபதிகளாகவும் கோடீஸ்வரராகவும் திகழ்கின்றனர், மேலும் பிரபலமான கிரிக்கெட் வீரர்கள் பல முன்னணி நிறுவனங்களின் பிராண்ட் அம்பாசிடராகவும் திகழ்ந்து வருகின்றனர்.
இந்நிலையில் கிரிக்கெட் போட்டிகளில் சிறந்த வீரராக திகழ்ந்தார் வறுமையில் வாடி வந்த ஐந்து கிரிக்கெட் வீரர்கள் பற்றி நாம் இங்கு காண்போம்.
ஜனர்தன் நவலே
இந்திய அணிக்கு சுதந்திரம் கிடைப்பதற்கு முன்பு இந்திய அணியின் கிரிக்கெட் வீரராக திகழ்ந்து வந்த ஜனர்தன் 1932 ஆம் ஆண்டு லார்ட்ஸ் மைதானத்தில் இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் விளையாடியிருக்கிறார். இவர் இரண்டு டெஸ்ட் போட்டிகள் மற்றும் 65 முதல் தர போட்டிகளில் விளையாடியுள்ளார்.
ஆனால் இவர் மிகவும் ஏழ்மையாக வாழ்ந்து வந்திருக்கிறார், புனேவில் உள்ள சுகர் மில்லில் பணியாற்றிய இவர், மகாராஷ்டிராவில் ஒரு மிகச் சிறிய வீட்டில் தங்கி ஒரு நாள் தேவைக்கு மிகவும் சிரமப்பட்டு 1979ஆம் ஆண்டு தனது உயிரை விட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.