உலகக்கோப்பை தொடரில் தொடர் நாயகன் விருதை தட்டிச்செல்ல தகுதியான 4 வீரர்கள் யார்? என்பதை இங்கு காண்போம்.
இங்கிலாந்து மற்றும் வேல்ஸ் நாடுகளில் நடைபெற்று வரும் உலகக்கோப்பை தொடர் மே மாதம் 30ம் தேதி தொடங்கி ஜூலை 14ஆம் தேதியுடன் முடிவடைய இருக்கிறது. மீதம் இறுதிப்போட்டி மட்டுமே உள்ளது. இத்தொடரில் மொத்தம் 10 அணிகள் பங்கேற்றன. ரவுண்ட் ராபின் முறையில் நடைபெற்ற லீக் சுற்றின் முடிவில் முதல் 4 இடங்களைப் பிடித்த இந்தியா, ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, நியூசிலாந்து அணிகள் அரை இறுதி சுற்றுக்கு முன்னேறின.
முதல் அரை இறுதி போட்டியில் கோப்பையை வெல்லும் என எதிர்பார்க்கப்பட்ட நியூசிலாந்திடன் இந்தியா அதிர்ச்சி தோல்வி கண்டு ஏமாற்றத்துடன் வெளியேறியது. இங்கிலாந்து அணியுடன் 2வது அரை இறுதியில் நடப்பு சாம்பியன் ஆஸ்திரேலிய அணி 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவி வெளியேறியது. இந்த நிலையில், புதிய சாம்பியன் யார் என்பதை தீர்மானிக்கும் பரபரப்பான பைனலில் இங்கிலாந்து – நியூசிலாந்து அணிகள் நாளை மோதவுள்ளன.
இத்தொடரில் பேட்ஸ்மேன்கள் மற்றும் பந்துவீச்சாளர்கள் பலர் அபாரமாக செயல்பட்டு பல சாதனைகளை நிகழ்த்தினர். அதில் சிறப்பாக செயல்பட்டு தொடர் நாயகன் விருது பெற தகுதியான 4 வீரர்கள் பட்டியல் இதோ.