டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டியில் இந்த 5 வீரர்களுக்கு வாய்ப்பு கிடைத்திருந்தால் வெற்றி உறுதி ;இளம் வீரர்களை மேற்கோள்காட்டி சீனியர் வீரர்களை வம்பிலுத்த முன்னாள் வீரர்கள் ..
2023 உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டியில் ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக இந்திய அணி மோசமான தோல்வியை தழுவியதால் பல்வேறு விதமான விமர்சனங்களை எதிர்கொண்டு வருகிறது.
குறிப்பாக இந்த டெஸ்ட் தொடரில் எந்த வீரரை தேவை இல்லாமல் இந்திய அணி தேர்ந்தெடுத்துள்ளது என்றும், இந்திய அணியின் கேப்டன் செய்த தவறு என்னவென்பது குறித்தும், தனிப்பட்ட வீரர்களின் செயல்பாடு குறித்தும் அதிகமாக பேசப்பட்டு வருகிறது. மேலும் இந்த உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டியில் எந்த வீரர்களுக்கு வாய்ப்பு அளித்திருந்தால் இந்திய அணி வெற்றி பெற்றிருக்கும் என்பது குறித்தும் இந்திய கிரிக்கெட் பரவலாக பேசப்பட்டு வருகிறது.
அந்த வகையில் உள்ளூர் போட்டிகளில் மிக சிறப்பாக செயல்பட்ட இந்த ஐந்து இளம் வீரர்களுக்கு வாய்ப்பளித்திருந்தால் ஒருவேளை இந்திய அணி வெற்றி பெற்றிருக்கலாம் என்பது போன்ற கருத்துக்களை முன்னாள் வீரர்கள் மற்றும் கிரிக்கெட் வல்லுனர்கள் பேசி வருகின்றனர்.
அப்படிப்பட்ட ஐந்து இளம் வீரர்கள் குறித்து இங்கு காண்போம்..
சர்ப்ராஸ் கான்.
2022-2023 ரஞ்சிக்கோப்பை தொடரில் மிகச் சிறப்பாக ஆட்டத்தை வெளிப்படுத்தி இந்திய கிரிக்கெட் வட்டத்தில் பேசுபொருளாக திகழ்ந்த சர்ப்ராஸ்கான் 2023 ரஞ்சிக்கோப்பையில் மட்டும் 3 சதங்களை விளாசி டெஸ்ட் தொடருக்கான இந்திய அணியின் இடத்தை பிடிக்கும் அளவிற்கு திறமையை மேம்படுத்தியுள்ளார்.
ஒருவேளை இவருக்கு உலக டெஸ்ட் சாம்பியன்ஸ் போட்டியில் இந்திய அணியில் இடம் கொடுத்திருந்தால், நிச்சயம் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி அசத்தியிருப்பார் என கிரிக்கெட் வட்டத்தில் பேசப்பட்டு வருகிறது .