Use your ← → (arrow) keys to browse
விராட் கோலிக்கு பதில் இவரை கேப்டன் ஆகலாம் என கூறிய ஐந்து இந்திய கிரிக்கெட் வீரர்கள்
விராட் கோலி இந்திய அணியின் கேப்டனாக அனைத்து விதமான போட்டிகளில் இருக்கிறார். தற்போது வரை பல சாதனைகளை படைத்து வருகிறார். கேப்டன் பதவியில் இருந்து தற்போது வரை இந்தியா அதிக வெற்றிகளை குவத்து வருகிறது. முழுவதுமான போட்டிகளுக்கு கேப்டனாக இருப்பதால் அவருக்கு வேலை பளு அதிகமாகிறது. மேலும் இவர் கேப்டனாக இருந்த காலத்தில் நடந்த சில ஐசிசி சர்வதேச தொடர்களில் இறுதிப் போட்டியிலும் அரையிறுதிப் போட்டியிலும் இந்திய அணி தோற்றது. இதன் காரணமாக அவருக்கு பதிலாக ரோஹித் சர்மாவை கேப்டனாக்கலாம் என சில இந்திய வீரர்கள் கூறியுள்ளனர்.
அந்த வீரர்களின் பட்டியலை தற்போது பார்ப்போம்….
யுவராஜ் சிங்
இவர் ரோஹித் சர்மாவின் தலைமையில் மும்பை இந்தியன்ஸ் அணிக்காக கடந்த ஐபிஎல் தொடரில் விளையாடியவர். மேலும், அதற்கு முன்னர் விராட் கோலியின் தலைமையில் பெங்களூரு அணியில் விளையாடி உள்ளார். தற்போது விராட் கோலி ரோகித் சர்மாவை கேப்டனாக்கலாம் என்று கூறிவருகிறார். மேலும், ரோகித் சர்மாவை கேப்டானக்குவதன் மூலம் விராட் கோலியின் வேலைப்பளுவும் குறையும் அதே நேரத்தில் அவர் இன்னும் பேட்டிங்கில் அதிகம் சாதிக்கலாம் என்றும் கூறியுள்ளார். முன்னதாக மும்பை இந்தியன்ஸ் அணிக்கு கேப்டனாக இருந்த ரோகித் சர்மா மூன்று முறை கோப்பையை கைப்பற்றி உள்ளார். இதன் காரணமாகவும் அவருக்கு டி20 கேப்டன்ஷிப் பதவியையாவது கொடுக்கலாம் என்று கூறியுள்ளார் யுவராஜ் சிங்.
Use your ← → (arrow) keys to browse