டெஸ்ட் தொடருக்கான இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி தென் ஆப்பிரிக்கா அணிக்கு எதிரான டெஸ்ட் தொடர் முடிந்தவுடன் டெஸ்ட் தொடர் கேப்டன் பதவியில் இருந்து ராஜினாமா செய்வதாக அறிக்கை வெளியிட்டிருந்தார்.
உலக அளவில் டெஸ்ட் தொடருக்கான தலை சிறந்த கேப்டனாக கருதப்படும் விராட் கோலி தோனியின் ஓய்விற்குப் பின் இந்திய அணியின் மிகச்சிறந்த இடத்தில் கொண்டு சென்றவர், மேலும் இவருடைய கேப்டன்ஷிப்பில் இந்திய அணிக்கு மிகச் சிறந்த வீரர்கள் உருவாகியுள்ளனர்.
அப்படி டெஸ்ட் தொடருக்கான இந்திய அணியில் விராட் கோலியால் நம்பிக்கை வைத்து வாய்ப்பளிக்கப்பட்ட வீரர்கள் பற்றி இங்கு காண்போம்.
ரோகித் சர்மா
2019ஆம் ஆண்டு வரை இந்திய அணிக்கான டெஸ்ட் தொடரில் ரெகுலர் வீரராக வாய்ப்பளிக்கபடாத ரோகித் சர்மா 2019 அதற்குப்பின் டெஸ்ட் தொடருக்கான இந்திய அணியின் துவக்க வீரராக விளையாடுவதற்கு வாய்ப்பு வழங்கப்பட்டது.
லிமிடெட் ஒரு போட்டிகளில் ராஜாவாக வலம் வரும் ரோஹித் சர்மாவிற்கு டெஸ்ட் தொடருக்கான இந்திய அணியில் விராட் கோலி தலைமையின் கீழ்தான் வாய்ப்பளிக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.