ஐ.பி.எல் தொடரில் சிறப்பாக செயல்பட்டும் உலகக்கோப்பையில் வாய்ப்பு கிடைக்காத ஐந்து இந்திய வீரர்கள்
உலகக்கோப்பை கிரிக்கெட் தொடருக்கான இந்திய அணியை பி.சி.சி.ஐ., இன்று அறிவித்துள்ளது.
கிரிக்கெட் உலகின் வல்லரசை (சாம்பியன்) தீர்மானிக்கும் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் மே மாத இறுதியில் துவங்க உள்ளது.
ஒட்டுமொத்த கிரிக்கெட் அணிகளின் கனவான உலகக்கோப்பையை வெல்ல வேண்டும் என்பதற்காக அனைத்து அணிகளும் தீவிரமாக தயாராகி வரும் நிலையில், உலகக்கோப்பை கிரிக்கெட் தொடருக்கான 15 வீரர்கள் கொண்ட இந்திய அணியை இந்திய கிரிக்கெட் வாரியம் (பி.சி.சி.ஐ)., இன்று அறிவித்தது.
உலகக்கோப்பைக்கான இந்திய அணியில் கே.எல் ராகுல், விஜய் சங்கர், தினேஷ் கார்த்திக் போன்ற வீரர்கள் இடம்பெற்றிருந்தாலும், ரிஷப் பண்ட், அம்பத்தி ராயூடு போன்ற வீரர்கள் இடம்பெறாதது இந்திய கிர்க்கெட் ரசிகர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
அதே வேளையில் நடப்பு ஐ.பி.எல் தொடரில் சிறப்பாக செயல்பட்டு வரும் போதிலும் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடருக்கான இந்திய அணியில் இடம்பெறாத ஐந்து வீரர்கள் குறித்து இங்கு பார்ப்போம்.
5 ; நவ்தீப் சைனி;
விராட் கோஹ்லி தலைமையிலான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியில் பந்துவீச்சில் மிக மட்டமாக செயல்பட்டு வருதால் பெங்களூர் அணி தொடர்ந்து படுதோல்வியை சந்தித்து வந்தாலும், அந்த அணியில் நவ்தீப் சைனி மட்டும் பெங்களூர் அணிக்கான தனது பங்களிப்பை சரியாகவே செய்து கொடுத்து வருகிறார். இவருக்கும் இந்திய அணியில் வாய்ப்பு கிடைக்கவில்லை.
4; சஞ்சு சாம்சன்;
இந்திய கிரிக்கெட் அணியின் எதிர்காலமே இவர் தான் என்று ரஹானே, டிராவிட் போன்ற வீரர்கள் பலரால் பாராட்டை பெற்ற சஞ்சு சாம்சன் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியில் தொடர்ந்து சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறார். இந்த உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் சஞ்சு சாம்சன் இடம்பெறவிட்டாலும் இளம் வீரரான இவருக்கு இந்திய அணியில் மிகப்பெரும் எதிர்காலம் உள்ளது என்பதே கிரிக்கெட் விமர்ச்சகர்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.
3; தீபக் சாஹர்;
தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் மிக முக்கிய வீரராக திகழ்ந்து வரும் தீபக் சாஹருக்கும் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடருக்கான இந்திய அணியில் வாய்ப்பு கிடைக்கவில்லை.
2; ஸ்ரேயஸ் ஐயர்
டெல்லி கேப்பிடல்ஸ் அணியின் கேப்டனான ஸ்ரேயஸ் ஐயர், டெல்லி அணியை சிறப்பாக வழிநடத்தி வருவதோடு தன்னுடைய தனிப்பட்ட ஆட்டத்திலும் தொடர்ந்து சிறப்பாகவே செயல்பட்டு வருகிறார். இந்த உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் இவர் இடம்பெறவிட்டாலும் இளம் வீரரான இவருக்கு இந்திய அணியில் மிகப்பெரும் எதிர்காலம் உள்ளது என்பதே கிரிக்கெட் விமர்ச்சகர்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.
1; ரவிசந்திர அஸ்வின்;
இந்திய கிரிக்கெட் அணியின் சீனியர் சுழற்பந்து வீச்சாளரும், ஐ.பி.எல் தொடருக்கான கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியின் கேப்டனுமான ரவிசந்திர அஸ்வின் அடுத்த உலகக்கோப்பை கிரிக்கெட் தொடருக்கான இந்திய அணியில் இடம்பெறவில்லை. இவரது சக வீரரான ஜடேஜாவிற்கு அணியில் இடம் கிடைத்துள்ளது. அஸ்வினுக்கு இடம் கிடைக்காது வேதனையான விசயம் என ஒரு சிலர் கருத்து தெரிவித்து வந்தாலும், அஸ்வின் போன்ற வீரர்கள் இல்லாமல் இருப்பது இந்திய அணிக்கு கூடுதல் பலம் என்பதே பெரும்பாலான கிரிக்கெட் ரசிகர்களின் கருத்தாக உள்ளது.