இவ்வளவு பெரிய ஆளா இருந்தும் இத பண்ண முடியலயே; ஒரு முறை கூட முதலிடத்தை பிடிக்காக ஐந்து முக்கிய வீரர்கள் !!

என்னதான் சிறப்பாக செயல்பட்டாலும் அதற்கென ஒரு மதிப்பும் பாராட்டும் வேண்டுமென்று அனைத்து வீரர்களும் ஏன் இவ்வாறு குறிப்பாக கிரிக்கெட் போட்டியில் சிறந்த பந்து வீச்சாளர் மற்றும் சிறந்த பேட்ஸ்மேன்களில் என்று ஐசிசி தரவரிசைப் பட்டியல் ஆண்டுதோறும் வெளியிடப்படும். அதில் சிறப்பாக செயல்பட்ட வீரர்களை புள்ளியின் அடிப்படையில் வரிசைப் படுத்துவார்கள்.

இந்நிலையில் ஒருநாள் போட்டித் தொடர்களில் உலகின் முன்னணி தரமான பேட்ஸ்மேன்களாக இருந்தும் 5 வீரர்களால் இன்னும் முதல் இடத்தை பிடிக்க முடியாமல் உள்ளனர், அப்பேர்ப்பட்ட ஐந்து வீரர்கள் பற்றி இங்கு காண்போம்.

கேன் வில்லியம்சன்

நியூசிலாந்து அணியின் நட்சத்திர வீரர் மற்றும் அந்த அணியின் கேப்டனுமான கேன் வில்லியம்சன் சமீப கால கிரிக்கெட் போட்டியில் அசைக்கமுடியாத ஒரு பேட்ஸ்மேனாக திகழ்ந்து வருகிறார்.

இந்நிலையில் ஒருநாள் போட்டித் தொடர்களில் 150 போட்டிகளில் பங்கேற்று 6000 மேற்பட்ட ரன்களை அடித்து அசத்தியுள்ளார், அப்படியிருந்தும் இவர் ஐசிசி ஒருநாள் தரவரிசை பட்டியலில் மூன்றாவது இடத்திலேயே இருந்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

இன்சமாம் உல் ஹக்

பாகிஸ்தான் அணியின் முன்னாள் ஜாம்பவான் இன்சமாம் உல் ஹக் ஒருநாள் போட்டித் தொடரில் பத்தாயிரத்திற்கும் மேற்பட்ட ரன்களை குவித்து சாதனை படைத்துள்ளார். அவர் ஆடிய காலங்களில் பந்து வீச்சாளர்களுக்கு சிம்மசொப்பனமாக திகழ்ந்த இன்சமாம் உல் ஹக் பல முறை பாகிஸ்தான் அணிக்கு வெற்றியை தேடி கொடுத்துள்ளார்.

மேலும் ஐந்து உலக கோப்பைகளில் பங்கேற்ற இவர் இறுதியாக 2007 உலகக் கோப்பைத் தொடரோடு தனது ஓய்வை அறிவித்தார். அப்படி இருந்தும் இவர் ஐசிசி தரவரிசை பட்டியலில் மூன்றாவது இடத்திலேயே இருந்தார், இவரால் முதலிடத்திற்கு முன்னேற முடியவில்லை.

ஜோ ரூட்

இங்கிலாந்து அணியில் டெஸ்ட் தொடரின் கேப்டனான ஜோ ரூட் சமகால கிரிக்கெட்டில் மிகச்சிறந்த வீரராக திகழ்ந்து வருகிறார். இவர் 2019 உலகக்கோப்பைக்குப்பின் டி20 மற்றும் ஒருநாள் தொடர்களில் அதிகமாக பங்கேற்கவில்லை.

இவர் கடைசியாக 2020 இல் நடந்த ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஒருநாள் போட்டியில் பங்கேற்றார், ஆனால் அந்த போட்டியில் ரன் எதுவும் எடுக்காமல் தனது விக்கெட்டை இழந்தார். ஒருநாள் போட்டியில் 6 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ரன்களை குவித்த ஜோ ரூட் ஐசிசி தரவரிசை பட்டியலில் இரண்டாம் இடத்தில் தான் இருந்தார், இவரால் முதல் இடத்திற்கு முன்னேற முடியவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

குமார் சங்ககாரா

இலங்கை அணியின் முன்னாள் கேப்டன் குமார் சங்ககாரா ஒருநாள் போட்டித் தொடர்களில் 404 போட்டிகளில் பங்கேற்று இந்திய அணியின் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கருக்கு அடுத்து அதிகமான ஒருநாள் போட்டிகளில் பங்கெடுத்த வீரர்களில் இவர் இரண்டாம் இடத்தில் உள்ளார். இவர் ஒருநாள் போட்டித் தொடர்களில் 14234 ரன்கள் அடித்து சாதனை படைத்துள்ளார்.

இந்நிலையில் 2015 உலகக் கோப்பைத் தொடரோடு ஓய்வை அறிவித்த குமார் சங்ககாரா ஐசிசி தரவரிசை பட்டியலில் அதிகபட்சமாக இரண்டாவது இடத்தில் தான் இருந்திருக்கிறார், இவரால் முதல் இடத்தில் முன்னேற முடியவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

ரோஹித் சர்மா

இந்திய அணியில் முன்னணி நட்சத்திர வீரரான ரோகித் சர்மா ஒருநாள் போட்டி தொடர்களில் மட்டுமல்லாமல் அனைத்து விதமான தொடர்களிலும் மிக சிறப்பாக செயல்பட்டு தனக்கென ஒரு தனி அடையாளத்தை பதித்துள்ளார்.

சமகால கிரிக்கெட் தொடரில் மிகச் சிறந்த வீரராக கருதப்படும் ரோஹித் சர்மா ஒருநாள் போட்டித் தொடரில் அதிகமான சாதனை படைத்துள்ளார் மேலும் மிக குறுகிய காலத்தில் பத்தாயிரத்திற்கும் மேற்பட்ட ரன்களை அடித்த ரோகித் சர்மா ஐசிசி தரவரிசை பட்டியலில் அதிகபட்சமாக இரண்டாவது இடத்தில் தான் இருந்து கொண்டிருக்கிறார் யுவராஜ் முதல் இடத்திற்கு இதுவரை முன்னேற முடியவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Mohamed:

This website uses cookies.