கிரிக்கெட் வீரர்கள் மிகச் சிறப்பாக விளையாடி சதம் அடித்த போதிலும், அவர்களது அணி தோல்வியை சந்தித்த போட்டிகள் !!!

Prev1 of 5
Use your ← → (arrow) keys to browse

கிரிக்கெட் போட்டியில் ஒரு வீரர் சதம் அடிப்பது அவ்வளவு சுலபமான விஷயம் கிடையாது. தனது முதல் பந்தில் இருந்து நிதானமாக விளையாடி ஆட்டத்தின் போக்கை தனது மனதில் நிலை நிறுத்தி புத்திசாலித்தனமாக விளையாடினால் மட்டுமே ஒரு வீரரால் சதம் அடிக்க முடியும்.

மிகச் சிறப்பாக விளையாடி சதம் அடித்து தங்களது அணியை ஒரு சிலர் கிரிக்கெட் வீரர்கள் வெற்றி பெறச் செய்து இருக்கின்றனர். ஆனால் கிரிக்கெட் போட்டிகளில் நாம் நினைப்பது எப்பொழுதும் நடந்து விடாது. அதேபோல மிக சிறப்பாக விளையாடி சதம் அடித்த வேளையிலும் சதமடித்த வீரர்களின் அணிகள் ஒரு சில சமயங்களில் தோல்வி பெற்றுவிடும். அப்படி ஒரு சிலர் கிரிக்கெட் வீரர்கள் மிக சிறப்பாக விளையாடி சதம் அடித்த போதிலும் அவர்களது அணி தோல்வியை சந்தித்த போட்டிகளைப் பற்றி தற்போது பார்ப்போம்.

டேவிட் வார்னர் தென்னாபிரிக்காவுக்கு எதிராக 173

2016ஆம் ஆண்டு நடந்த ஒருநாள் போட்டியில் ஆஸ்திரேலியா மற்றும் தென் ஆப்பிரிக்கா அணிகள் மோதிக்கொண்டன. முதலில் பேட்டிங் விளையாடிய தென்ஆப்பிரிக்கா அணி 50 ஓவர் முடிவில் 8 விக்கெட் இழப்பிற்கு 327 ரன்கள் குவித்தது. தென்ஆப்பிரிக்க அணியில் மிக சிறப்பாக விளையாடிய ரிலே ரஸ்ஸவ் 122 ரன்கள் குவித்தார். அவருக்கு துணையாக ஜேபி டுமினி 73 ரன்களும், டேவிட் மில்லர் 39 ரன்களும் குவித்தனர்.

அதன் பின்னர் களமிறங்கிய ஆஸ்திரேலிய அணியில் வார்னர் அன்றைய போட்டியில் ருத்ர தாண்டவம் ஆடினார். 136 பந்துகளில் 123 ரன்கள் குவித்து மிக சிறப்பாக விளையாடிய தென்ஆப்பிரிக்கா அணி பந்து வீச்சாளர்களை அச்சுறுத்தினார். அவருக்கு துணையாக மிச்செல் மார்ஷ் மற்றும் டிராவிஸ் ஹெட் ஆகிய இருவரும் 35 ரன்கள் குவித்தனர்.

அந்த போட்டியில் அவர் அவ்வளவு சிறப்பாக விளையாடி சதம் அடித்திருந்த போதிலும், மற்ற வீரர்கள் அவ்வளவு சிறப்பாக விளையாட காரணத்தினால், இறுதியில் ஆஸ்திரேலிய அணி 31 ரன்கள் வித்தியாசத்தில் தென் ஆப்பிரிக்க அணியிடம் தோல்வி அடைந்தது.

Prev1 of 5
Use your ← → (arrow) keys to browse

Prabhu Soundar:

This website uses cookies.