இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் மோதும் போட்டிகள் உலக அளவில் அனைத்து ரசிகர் மத்தியில் மிகப்பெரிய ஆர்வத்தை ஏற்படுத்தும். கிட்டத்தட்ட பத்து வருடங்களுக்கு மேலாக இந்த இரு அணிகளும் சர்வதேச அளவில் எந்த விதமான இருதரப்பு தொடர்களில் விளையாட வில்லை என்றாலும், அரிசியை நடத்தும் சர்வதேச தொடர்களில் இந்த இரு அணிகளும் மோதிக் கொள்ளும். அப்படி ஐசிசி நடத்தும் சர்வதேச தொடர்களில் இந்த இரு அணிகள் மோதிக்கொள்ளும் போட்டிகள் மிகப் பெரிய உற்சாகத்தை இந்த இரு நாட்டு ரசிகர்கள் இடையே ஏற்படுத்தும்.
தற்பொழுது இந்த ஆண்டு இறுதியில் நடக்கவிருக்கும் உலகக் கோப்பை டி20 தொடரில் குரூப் பி அணியில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் இடம்பெற்றுள்ளன. இந்த செய்தி இது இரு நாட்டு கிரிக்கெட் ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பை தற்பொழுது ஏற்படுத்தியுள்ளது. மீண்டும் ஒரு முறை இந்த இரு அணிகளும் மோதிக் கொள்ளும் போட்டியை காண இரு நாட்டு கிரிக்கெட் ரசிகர்களும் மிக ஆர்வமாக தற்பொழுது காத்திருக்கின்றனர்.
இந்த இரு அணிகளும் ஐசிசிநடத்தும் சர்வதேச தொடர்களில் நிறைய முறை மோதி இருந்தாலும், அதில் குறிப்பிட்ட ஒரு சில மறக்க முடியாத போட்டிகளைப் பற்றி தற்போது பார்ப்போம்.
உலக கோப்பை டி20 தொடர் 2007
2007ஆம் ஆண்டு நடந்த உலக கோப்பை தொடரில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் மோதியது. அதில் லீக் ஆட்டத்தில் ஒரு போட்டியில் இந்திய அணி முதலில் பேட்டிங் செய்தது. பாகிஸ்தான் அணி சார்பாக முகமது ஆசிப் மிக அற்புதமாக பந்து வீசி 4 விக்கெட்டுகளை கைப்பற்றி அசத்தினார். அதன் காரணமாக இந்திய அணி அந்த போட்டியில் முதல் இன்னிங்ஸ் முடிவில் 141ரன்கள் மட்டுமே எடுத்தது. ராபின் உத்தப்பா அந்த போட்டியில் இந்திய அணி சார்பாக அதிக ரன்கள் அடித்திருந்தார்.
142 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய பாகிஸ்தான் அணி, இறுதியில் மூன்று பந்துகளில் ஒரு ரன் எடுக்க வேண்டும் என்கிற நிலையில் இருந்தது. ஸ்ரீசாந்த் மிக அற்புதமாக பந்துவீசி மூன்று பந்துகளையும் ரன் அடிக்க விடாமல் செய்தார். அதன் காரணமாக போட்டி சமனில் முடிவடைந்தது. வெற்றியை தீர்மானிக்க முதல் முறையாக பவுல் அவுட் விதிமுறையை ஐசிசி கொண்டு வந்தது.
இரு அணிகள் இருக்கும் மூன்று பந்துவீச்சாளர்கள் சரியா ஸ்டம்ப்புகளை குறிபார்த்து பந்து வீச வேண்டும். அந்த விதிமுறையின் கீழ் இந்திய அணி வெற்றி பெற்று, அதன் பின்னர் சூப்பர் 8 சுற்றுக்கு சென்றது குறிப்பிடத்தக்கது.