இந்திய அணி தோல்வியுற்றபோதும்… அனைவரின் மனதையும் வென்ற தோனியின் சிறந்த 5 ஆட்டங்கள்!
#5 இந்தியா vs இங்கிலாந்து டி20, பிர்மிங்கஹாம் 2014
2014ஆம் ஆண்டு இங்கிலாந்து சுற்றுப்பயணம் மேற்கொண்ட இந்திய அணி 1-3 என டெஸ்ட் தொடரை இழந்தபிறகு, 3-1 என ஒருநாள் தொடரை கைப்பற்றியது. இதனையடுத்து 1 போட்டி கொண்ட டி20 தொடருடன் இங்கிலாந்து சுற்றுப்பயணம் முடிவு பெற இருந்தது.
டி20 போட்டியில் இங்கிலாந்து அணி முதலில் பேட்டிங் செய்து 180 ரன்கள் விளாசியது. சற்று கடினமான இலக்கை துரத்திய இந்திய அணிக்கு அதிரடி பார்மில் இருந்த விராட்கோலி 66 ரன்கள் அடித்து ஆட்டமிழந்தார். 34 பந்துகளில் 50 ரன்கள் தேவைப்பட்ட நிலையில் தோனி களம் கண்டார். 22 பந்துகளில் 24 ரன்களை அவர் எடுத்திருந்தார்.
கடைசி ஓவரில் 17 ரன்கள் தேவைப்பட்டபோது முதல் பந்தை சிக்ஸர் விளாசினார். பின்னர் 2 ரன்கள் எடுத்துவிட்டு, 3வது பந்தில் ஒரு எடுக்கும் வாய்ப்பு இருந்தும் அதை மறுத்துவிட்டார். 4வது பந்து பவுண்டரிக்கு விரட்டப்பட்டது. 2 பந்தில் 5 ரன்கள் என இருந்தபோது கடைசி பந்தில் பவுண்டரி அடிக்க முயற்சிக்கையில் 1 ரன் மட்டுமே எடுக்க முடிந்தது. இந்திய அணி 3 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது.