வேறு வழியே கிடையாது; பஞ்சாப் அணியில் இருந்து தூக்கியெறியப்பட வாய்ப்புள்ள ஐந்து வீரர்கள்
ஐபிஎல் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடக்கவுள்ள நிலையில், அனைத்து அணிகளும் அங்கு செல்ல தயாராகிவரும் நிலையில், ஒரு அணிக்கு 24 வீரர்கள் மட்டுமே அனுமதிக்கப்பட்டுள்ளனர். ஒரு அணி அதிகபட்சம் 24 வீரர்களை மட்டுமே ஐக்கிய அரபு அமீரகத்திற்கு அழைத்து செல்ல முடியும். ஐபிஎல்லின் பெரும்பாலான அணிகளில் அதிகபட்சமாக 24 வீரர்கள் இருப்பதால், இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
ஆனால் பஞ்சாப், ராஜஸ்தான் மற்றும் ஹைதராபாத் ஆகிய 3 அணிகளில் ஒரு வீரர் கூடுதலாக உள்ளார். எனவே இந்த 3 அணிகளும் ஒரு வீரரை மட்டும் கழட்டிவிட்டு செல்ல வேண்டியுள்ளது.
இந்த மூன்று அணிகளில் ஒரு அணியான கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியில் இருந்து நீக்கப்பட வாய்ப்புள்ள ஐந்து வீரர்கள் குறித்து இங்கு பார்ப்போம்.
5 – தர்சன் நல்கண்டே;
சையத் முஸ்தாப் அலி தொடரில் விதர்பா அணிக்காக விளையாடும் இளம் வேகப்பந்து வீச்சாளரான தர்சன் நல்கண்டே, கடந்த சையத் முஸ்தாக் அலி தொடரில் அதிக விக்கெட்டுகள் வீழ்த்திய வீரர்கள் இவரும் ஒருவர். பஞ்சாப் அணியில் இவருக்கான வாய்ப்பு இன்னும் கிடைக்காமல் இருக்கிறது. அனுபவ வீரர்களுக்கு பஞ்சாப் அணி முக்கியத்துவம் கொடுக்கும் பட்சத்தில் இவரை பஞ்சாப் அணி கழட்டிவிட வாய்ப்புகள் உள்ளது.
4 – அர்ஸ்தீப் சிங்;
இடது கை சுழற்பந்து வீச்சாளரான அர்ஸ்தீப் சிங் கடந்த தொடரில் பஞ்சாப் அணிக்காக விளையாடினார். கடந்த தொடரில் சொல்லிக்கொள்ளும் அளவிற்கு செயல்படாத இவரை கூட பஞ்சாப் அணி கழட்டிவிட வாய்ப்புள்ளதாக தெரிகிறது.
3 – பிரமிசிம்ரன் சிங்;
விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனான இவர் கடந்த தொடரில் பஞ்சாப் அணிக்காக விளையாடினார். கே.எல் ராகுல், நிக்கோலஸ் பூரண் என இரண்டு அனுபவ விக்கெட் கீப்பர்கள் அணியில் இருப்பதால் இளம் வீரரான இவரை கூட பஞ்சாப் அணி கழட்டிவிடலாம் என தெரிகிறது.
2 – ஜெகதீஸ சுசித்;
இளம் சுழற்பந்து வீச்சாளரான இவர் கடந்த 2015ம் ஆண்டு நடைபெற்ற தொடரின் மூலம் ஐ.பி.எல் தொடருக்கு அறிமுகமானவர். ஐ.பி.எல் தொடரில் இதுவரை 15 போட்டிகளில் விளையாடியுள்ள இவர் அதில் 12 விக்கெட்டுகள் மட்டுமே வீழ்த்தியுள்ளார். கிருஷ்ணப்பா கவுதம், பிசோனி போன்ற அனுபவம் வாய்ந்த சுழற்பந்து வீச்சாளர்கள் அணியில் இருப்பதால் இவரை கூட பஞ்சாப் அணி கழட்டிவிட வாய்ப்புள்ளதாக தெரிகிறது.
1 – ஹர்தஸ் வில்ஜியோன்;
வெளிநாட்டு வீரரான இவர் கடந்த வருட ஐ.பி.எல் தொடரில் பஞ்சாப் அணியில் அறிமுகமானவர். ஆறு போட்டிகளில் விளையாடி வெறும் 7 விக்கெட்டுகள் மட்டுமே வீழ்த்தியுள்ள இவர் கடந்த தொடரில் ரன்களை வாரி வழங்கியவர். கடந்த தொடரில் சரியாக செயல்படாததன் காரணமாக இவரை கூட பஞ்சாப் அணி கழட்டிவிடலாம் என தெரிகிறது.