2019ஆம் ஆண்டு ஐபிஎல் தொடர் துவங்கியதும் தெரியாமல் முடிவதும் தெரியாமல் பரபரப்பாக முடிந்திருக்கிறது. குறிப்பாக, இப்படி ஒரு இறுதிப்போட்டியை எவரும் கண்டிராத அளவிற்கு விறுவிறுப்பை கூடியது. துரதிஷ்ட வசமாக, சென்னை அணி 1 ரன்னில் தோல்வியை தழுவியது.
சென்னை அணியில் பல வீரர்கள் காயம் காரணமாக அவதிப்பட்டனர். அதில் தோனியும் ஒருவர் என்பதே வருத்தத்திற்கு உரிய ஒன்று. சில வீரர்கள் வயதின் காரணமாகவும் உடல்தகுதி இல்லாமல் அவதிப்பட்டனர். தொடரின் துவக்கத்திலேயே சென்னை அணியின் பில்ட்டிங் வருத்தம் தரக்கூடியதாக இருக்கிறது என அணியின் தலைமை பயிற்சியாளர் ஸ்டீபன் பிளெமிங் கூறினார்.
இந்நிலையில், இந்த சீசன் முடிவுற்ற நிலையில், அடுத்த சீசனில் சென்னை அணியில் இருந்து வெளியேற்றப்பட சாத்தியம் உள்ள 5 வீரர்கள் பட்டியல் இதோ.
#5 சாம் பில்லிங்ஸ்
சென்னை அணி ஒவ்வொரு போட்டிக்கும் வீரர்களை மாற்றும் பாணியில் இறங்காது. இதனால் இந்த ஆண்டு சில வீரர்கள் தங்களது திறமையை கட்டமுடியாமல் வெளியில் அமர்த்தப்பட்டனர். அதில் சாம் பில்லிங்ஸ் ஒருவர். தோனி காயம் காரணமாக வெளியில் அமர்த்தப்பட்ட பொது இவருக்கு ஒரு போட்டியில் வாய்ப்பு கிடைத்தது. அதிலும் ரன் ஏதும் எடுக்காமல் வெளியில் அமர்த்தப்பட்டார்.
அடுத்த சீசனில் இவரை ஏலத்தில் எடுக்க சென்னை அணி முன்வர தயாராகும் என்பது சந்தேகமே.